Header Ads



ஜனாதிபதியைப் போல சுற்றுச்சூழலை, நேசிக்கும் எவரும் இல்லை - சரத் வீரசேகர


காடழிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய, கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில், சுற்றுச்சூழலை அழித்து வந்தவர்கள் தற்போது தனியார் நிலங்களில் மரங்களை வெட்டுவதைக்கூட பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு எனக் கூறிவருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

கொலன்னாவையில் நேற்று (29) இடம்பெற்ற சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியைப் போல சுற்றுச்சூழலை நேசிக்கும் எவரும் இல்லை எனக் குறிப்பிட்ட சரத் வீரசேகர, பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் சுற்றுச்சூழலை அழகுபடுத்த அவர் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சுற்றுச்சூழலை அழிப்பது என்பது நாட்டுக்கு இழைக்கும் துரோகம் என்பதைத் தாம் நினைவில் கொள்ளவேண்டும் என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

எனவே, காடழிப்பு மற்றும் சுற்றுசூழலைப் பாதிக்கும் வகையில் செயற்பட்ட அனைவரையும் கைதுசெய்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குமாறு ஜனாதிபதி குறித்த குழுவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.