Header Ads



முஸ்லிம்களுக்கு உடல்களை நல்லடக்கம் செய்ய உரிமையுள்ளது, கட்டாய தகனத்திற்கு எதிர்ப்பு - இரணைதீவு மக்கள் அனுப்பிய கடிதம்



கொவிட்-19 சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்தினை மீள் பரிசீலனை செய்து உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் இரணைதீவு மக்கள் கோரியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி அவர்கள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் வாழும் மக்களுடன் இணைந்து எமது சக முஸ்லிம் சமூகத்தின் நல்லடக்க உரிமைக்காகவும், கட்டாய தகனத்தை எதிர்த்தும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதாக அந்த மக்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எமது நாட்டின் கலாசாரத்திற்கு அமையவும், உலகலாவிய மனிதாபிமான விழுமியங்களுக்கு அமையவும் உயிரிழந்தவர்களுக்கான உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொவிட்-19 தொற்றால் மரணப்பவர்களின் சடலங்களை இடத்திற்கு இடம் காவிச் செல்வது இறந்தவர்களின் கௌரவத்தையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கௌரவத்தையும் மீறும் செயற்படாகும்.

எனவே கொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்யும் மயானமாக இரணைதீவை மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மீளப்பெற வேண்டும்.

அத்துடன் முஸ்லிம் மக்களினதும் ஏனைய சமூகங்களினதும் நல்லடக்க உரிமைக்கு உரிய கௌரவம் அளித்து அவர்களுக்கு பொறுத்தமான இடங்களில் அடக்கம் செய்வதை உறுதிப்படுத்துமாறு இரணைதீவு மக்கள், அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளனர்.

4 comments:

  1. “Racism is man’s gravest threat to man - the maximum of hatred for a minimum of reason.”

    ReplyDelete
  2. யா அல்லாஹ் .இந்த சோதனையிலிருந்து எமது சமூகத்தை பாதுகாத்தருள்வாயாக.....

    ReplyDelete
  3. No any possible reason for this protest

    ReplyDelete
  4. Health Officials create hatredness among communities, and unnecessary problems in the country by searching burial grounds for the deadbodies of corona. It’s totally against all norms, nature, knowlege, and the findings and instructions of experts, scientists, doctors, WHO etc etc! Shame!

    ReplyDelete

Powered by Blogger.