Header Ads



கொரோனா ஜனாசா நல்லடக்க பகுதியில் நெருக்கடிகள் - முஸ்லீம் தனவந்தர்களே கண்களை திறவுங்கள்


- Mohammed Rihan -

கொவிட் இனால் மரணிக்கப்பட்ட ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி சூடுபத்தின சேனை ஜனாஷா மையவாடி...!

ஜனாஷாக்கள் நல்லடக்கம் செய்யப்படுகிறது என நாட்டு முஸ்லீம்களாகிய நாம் அனைவரும் மகிழ்ச்சியிலும் பறிபோன எம் உரிமை கிடைத்ததை எண்ணி மன ஆறுதலும் அடைந்து கொண்டிருக்கிறோம்.

இந்த உரிமையை மீட்டெடுத்து கொடுத்தோம் என பல அரசியல் வாதிகளும் சில நபர்களும் உரிமை கோரி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஏச்சுக்களையும் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதில் ஆங்காங்கே சில அரசியல் சண்டைகளையும் காணுகிறோம்.

மையவாடிக்கு காணி எடுக்கப்பட்ட விடயமும் ஒரு சிலரால் உரிமை கொண்டாடப்படுகிறதாம். காணி எவ்வாறு கிடைத்தது யார் யார் அங்கே களத்தில் நின்றனர் என முழு விபரத்தையும் இன்னொரு பதிவில் தருகிறேன்.

இது எல்லாவற்றிற்கும் அப்பால் அங்கே களத்தில் அன்றாடம் இதனை ஒழுங்கு செய்து ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்து கொண்டிருக்கும் எம் உறவுகளிடம் இருந்து நேற்று  சில தகவல்கள் கிடைக்கப்பெற்றது. 

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளை செய்வதற்காகவும் ஒழுங்கமைப்பதற்காகவும் ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த ஊர் பிரமுகர்கள் எல்லோரையும் உள்ளடக்கி ஒரு குழு அவசர அவசரமாக அமைக்கப்பட்டது.

அதற்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர்  AM. நௌபர் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

நாளாந்தம் ஜனாசாக்களை அடக்குவதற்கு அங்கே பல நடைமுறைச் செலவுகளும் சில பிரச்சினைகளையும் நாளுக்கு நாள் எதிர் கொள்கின்றனர். 

அவற்றை பட்டியலிடுகிறேன்.

1. அங்குள்ள நிலத்தில் மண்வெட்டிகளால் கபுர் குழிகளை தோண்ட முடியாதவாறு இருக்கிற காரணத்தினால் JCB இயந்திரத்தை பயன்படுத்தி தான் தோண்ட வேண்டிய தேவை இருக்கிறது. (அதற்கான ஒரு நாள் வாடகை 35000 ரூபா)

தற்போது இஸ்ஹாக் MP இன் உதவியினால் அவரது இயந்திரம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

2. நாளாந்தம் அங்கே ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்வதற்காக இரவு பகல் பாராது ஆறு அல்லது எட்டுப் பேர் மையவாடிக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் அனைவரும் அன்றாடம் கூலி தொழில் செய்பவர்கள். 

தொடர்ந்து அவர்களிடத்தில் ஊதியமின்றி வேலை செய்யுங்கள் என கூற முடியாது. அவர்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் என பராமரிக்க நாளாந்த செலவுகள்  இருக்கிறது.

3. அங்கு வேலை செய்பவர்களுக்கான உணவுத் தேவைகள் மற்றும் ஜனசா நல்லடக்கத்திற்கான சில பொருட்களின் தேவைகள் என இன்ன பிற செலவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

4. சூடுபத்தின சேனை என்ற இடம் மக்கள் நடமாட்டமில்லாத ஒரு காட்டுப் பகுதி.

அங்கே சாதாரணமாக யானைகளின் நடமாட்டம் பகல் வேலைகளிலும் இருக்கிறது.

5. அந்த மையவாடிக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக சேதமடைந்து காணப்படுகிறது. ஜனாசாக்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மிக சிரமப்பட்டு அவ்வழியால் செல்கிறது.

6. மையவாடியைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும் என ராணுவமும்  சுகாதார தொழில் நுட்பக் குழுவும் சொல்லியிருக்கிறார்கள்.

7. காட்டுப்பகுதி என்பதால் குடி நீர் வசதி மற்றும் மலசல கூடங்கள் அங்கே இல்லை. அங்கே களத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது பெரிய அசௌகரியமாக அமையும் என நினைக்கிறேன்.

8. இருள் சூழ்ந்த பிரதேசமாக இருப்பதனால் இரவு வேளைகளில் வாகனங்களின் வெளிச்சத்திலேயே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். 

அங்கு மின் விளக்குகளை பொருத்தி யானைகளின் நடமாட்டத்தையும் குறைக்க வேண்டும். 

9. இன்னும் சில சொல்ல முடியா பிரச்சினைகளும் உள்ளன.

எனவே இதற்கான வழிமுறைகளை தீர்வுகளை உடனடியாக செய்ய அனைவரும் தங்களாலான பங்களிப்புக்களை வழங்க வேண்டும்.

ஜனாஷா நல்லடக்க குழு இதற்கான முழு முயற்சிகளையும் செய்து வருகிறது.

தனவந்தர்கள் இதற்கான நிதி உதவிகளை வழங்க முன்வர வேண்டும். 

அரசியல் மற்றும் அரசாங்க வேலைகளை பார்த்துக் கொள்ளவும் கருத்துக்களை சொல்லவும்  பலர் இருக்கிறார்கள் ஆனால் களச் செயற்பாடுகளில் கவனம் செலுத்த மிகக் குறைவானவர்களே இருக்கிறார்கள்.

இந்த பதிவினை விரும்பினால் பகிர்ந்து  உதவி செய்ய தயாராக இருக்கும் நல்லுள்ளங்களுக்கு இச்செய்தி சென்றடைய உதவுங்கள்.

உதவ முன்வருபவர்களுக்கு களத்தில் இருப்பவர்களின் தொடர்பிலக்கங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன்.

11 comments:

  1. Inshaallah we will establish a common funds in order to meet the incidential expenses please e every one will contribute
    Jazaakallahaair

    ReplyDelete
  2. Ithil thanawantharhal maddumintri ellorum mudithalavu oor jamaath vaariyaha ontrinainthu oththilaippu valanke vending.

    ReplyDelete
  3. Ithil thanawantharhal maddumintri ellorum mudithalavu oor jamaath vaariyaha ontrinainthu oththilaippu valanke vending.

    ReplyDelete
  4. இதற்காக ஒரு bank account ஒன்றை திறந்தால்
    அவரவர் தமது தகைமை
    க்கு ஏற்ப தம்மாளான தொகையை பரிமாறிக் கொள்ள உதவும்

    ReplyDelete
  5. please shere the conatct details ....

    ReplyDelete
  6. yes please, please share the contact numbers

    ReplyDelete
  7. At once may have included the right contact details of the people who are in the field..

    ReplyDelete
  8. can u give me the telephone number for contect

    ReplyDelete
  9. இதில் கையாடல்கள் வராமல் இருக்க தேவைப்படும் தேவைகளை வசதி படைத்த முஸ்லீம் ஊர்கள் அவரவர்களின் ஊறினால் தேவைகளை செய்து கொடுக்க வேண்டும் அதாவது உதாரணத்துக்கு பாதை :- அக்குறணை + பேருவளை சேர்ந்து இரண்டு ஊர்களின் தகுதி (ஒரு எஞ்சிணியர்+கணக்காளர்+கட்டடட நிபுணர்+3 வசதி படைத்தவர்கள்) வாய்ந்தவர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து அவர்களுக்குரிய செலவுகளையும்+வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து செய்ய முடியும் அத்துடன் இந்த குழுவுடன் ஏனைய வற்றுக்கும் தகுதிவாய்ந்தவர்களை சேர்த்து செய்து கொடுக்க முடியும் இங்கு அல்லாஹ்வை அஞ்சியவர்கள்(தக்வா தாரிகள்) உள்வாங்கப்படணும் ரசூலுல்லாஹ் காட்டிய வழியில் பதவிக்கு ஆசைப்படுபவர்களை தவிர்த்தல் மிக முக்கியம்

    ReplyDelete

Powered by Blogger.