Header Ads



இந்திய பணக்காரர் அதானி, இலங்கைக்கு நன்றி தெரிவிப்பு


கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிப்பதற்காக தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை தொடர்பில் இந்தியாவின் அதானி குழும உரிமையாளர் கௌதம் அதானி, இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், துறைமுக அதிகார சபை மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அவரது ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கூட்டு தொழில் முயற்சி இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான வரலாற்று உறவின் சின்னமாக அமையுமென கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத முதலீட்டுக்கு அதானி குழுமத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இதற்கு அதானி நன்றி தெரிவிக்கவேண்டியது இலங்கை அரசுக்கு இல்லை, UNRHC யில் இலங்கை அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தமிழர்களுக்கு தான்

    ReplyDelete

Powered by Blogger.