Header Ads



டுபாயிலுள்ள ஷேக்கின் குடும்பமும் இலங்கையின், திட்டங்களில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது - நாமல்


முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை ஈர்த்துள்ளமையால் நாம் பெரியதொரு சாதனையை படைத்துவிட்டோம் என்பதை நினைக்கும் போது எமக்கு பெருமையாக உளளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டுபாய்க்கு தான் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“டுபாயின் ஷேக் சயீத் அறக்கட்டளை (Sheikh Zayed Foundation) இலங்கையிலுள்ள கிராமப்புற பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறைகளை வழங்கும் செயற்பாட்டுக்கு உதவுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஷேக் சயீத் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் இயக்குநர் ஜெனரல் ஹமாத் சேலம் பின் கர்தூஸ் அல் அமேரி ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் விளைவாகவே இந்த உதவி கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும் டுபாயிலுள்ள ஷேக்கின் குடும்பமும் இலங்கையின் திட்டங்களில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது.

இவ்வாறு இலங்கை திட்டங்கள் மற்றும் தொழில்களில் முதலீடு செய்வதற்கு, இதுபோன்ற சிறந்த முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதைப் பார்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய சாதனையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். IBC

2 comments:

  1. அப்போ புர்கா....???

    ReplyDelete
  2. Your family purchase big hotel in
    Dubai.your getting good profit so much

    ReplyDelete

Powered by Blogger.