Header Ads



முஸ்லீம்கள் அதிகளவிற்கு ஓரங்கட்டப்படுவதாக, புதுப்பிக்கப்பட்ட ஐ.நா. வரைபில் தெரிவிப்பு


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபு வெளியாகியுள்ளது.

நகல்வரைபின் உரையின் மொழியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும், புதுப்பிக்க வரைபு சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை குறித்த தமிழ் மக்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்யும் விதத்தில் காணப்படாதது குறிப்பிடத்தக்கது.

இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை எதிர்கால விசாரணைகளில் பயன்படுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்தல் ஒருங்கிணைத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பயணதடைகள் போக்குவரத்து தடைகள் போன்றவற்றை விதிக்குமாறும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து எதனையும் புதுப்பிக்கப்பட்ட வரைபு குறிப்பிடவில்லை.

இலங்கையில் தமிழர்கள் முஸ்லீம்கள் அதிகளவிற்கு ஓரங்கட்டப்படுவது சிவில சமூகத்தினர் கண்காணிக்கப்படுவது அச்சுறுத்தப்படுவது ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை பொதுமக்கள் நினைவுகூறுவது மீதான கட்டுப்பாடுகள் – நினைவுத்தூபிகள் அழிக்கப்படுதல் குறித்த கரிசனைகளும் புதிதாக இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் மனித உரிமை ஆணையகம் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகிய வலுவான விதத்திலும் சுதந்திரமாகவும் செயற்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்ற விடயமும் புதுப்பிக்கப்பட்ட வரைபில் இடம்பெற்றுள்ளது.

1 comment:

  1. yes, Singlish racists are working very hard to demolish Muslim community , UN need to look at this issue very seriously

    ReplyDelete

Powered by Blogger.