Header Ads



சஹ்ரானின் சகோதரருக்கு சிகிச்சையளித்தவரும், டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டவரும் கைது


தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளாரென்றும் இவர், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரானின் சகோதரரான ரில்வான், 2018ஆம் ஆண்டு குண்டொன்றை வெடிக்க வைத்து பரிட்சித்த போது காயமடைந்ததாகவும் இதன்போது ரில்வானை கொழும்புக்கு அழைத்து வந்து அவருக்கான மருத்துவ சிகிச்சைகயை முன்னெடுத்தவரே நேற்றைய தினம் காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்ட நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 44 வயதுடைய இலங்கையர் ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மாவனெல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசெம்பர் 5ஆம் திகதி சந்தேகநபர், டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.