Header Ads



ஜனாஸாக்களை மையவாடிகளில் அடக்கலாம், இன்னோர் இனத்தைக் கிண்டி முரண்பாட்டை தோற்றுவிக்கக்க கூடாது


இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தாது, முஸ்லிம்களின் விருப்பப்படி  ஜனாஸாக்களை மையவாடிகளிலேயே அடக்கம் செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காது, தமிழ், முஸ்லிம்களின் ஒன்றுமையைச் சிதைப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார். 

'மையவாடியில் இடங்கள் இருக்கின்றன. அதில் அடக்கம் செய்யுங்கள் என, அரச தரப்பினருக்கு பல்வேறு கோரிக்கைகளை முஸ்லிம் தரப்பின் முன்வைத்துள்ளனர். அதனை இலங்கை அரசாங்கம் செவிமடுப்பதே இல்லை' என்றார்

'கிறிஸ்தவர்கள் கூடுதலாக வாழுகின்ற தமிழ் மக்களுடைய ஒரு தனித் தீவாக, கிளிநொச்சி மாவட்டத்தில்  இருக்கின்ற இரணைத்தீவு பகுதியில் நல்லடக்கம் செய்வதற்கு ஓர் இராஜதந்திர நகர்வை, அரசாங்கம் மேற்கொள்கின்றது' என்றார். 

'எங்களைப் பொறுத்தவரைக்கும்  ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்; ஜனாஸாக்கள் எரிக்கப்படக்கூடாது. இன்றும் பல ஜனாஸாக்கள் குளிரூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன' எனத் தெரிவித்த அவர், முஸ்லிம்களின் விருப்பப்படி, மையவாடிகளில் அடக்கம் செய்யலாம். ஆனால், இந்த விவகாரத்துக்கான முடிவு, இன்னோர் இனத்தைக் கிண்டி விட்டு, முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாக அமையக்கூடாது என்றார். 

1 comment:

  1. சிறிதரன் சேர், ஜனாசாக்களது நல்லடக்கத்திற்காக முஸ்லிம்கள் மாத்திரமன்றி சகல தரப்புகளும் வெளிநாட்டுத் தரப்புகள்கூட ஏன் ஐநாஅ கூட வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து பேசுங்கள்

    சுமந்திரன் சேர், சாணக்கியன் போன்றோர் சிறுபான்மை இனம் ஒற்றுமைப்படல் வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்நாட்களில் தாங்களும் முன்னின்று இப்போராட்டத்தில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் தங்களுடைய பெயரும் "சிறுபாதன்மையினரைக் கட்டியணைத்த மகாபுருஷர்கள்' என்ற மகுடத்தில் பதிவுபெறும் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.