March 24, 2021

டுபாய் துணை ஆட்சியாளரின், ஜனாஸா நல்லடக்கம் நடைபெற்றது


ஷேக் முகமத் அவர்களின் சகோதரரும் துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானார்.

துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உடல்  நல்லடக்கம் நடைபெற்றது.

ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூமின் இரண்டாவது மகன். ஷேக் ஹம்தான் அவர்கள் டிசம்பர் 25,1945 இல் பிறந்தார். ஷேக் ஹம்தான் பின் ரஷீத் 1971 ஆம் ஆண்டு டிசம்பர்9-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் அமைச்சரவை அமைக்கப்பட்டதிலிருந்து நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். 

 ஷேக் ஹம்தான் அவர்கள் மறைவயோட்டி இன்று(24/03/21) புதன்கிழமை துவங்கி துபாயில் 10 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



1 கருத்துரைகள்:

Innalillahi wainna ilaihi rajioon

Post a comment