Header Ads



கொரோனா தடுப்பூசி செலுத்தும், நிலையங்கள் அருகில் ஒன்று கூட வேண்டாம் - சுகாதார அமைச்சு


கொரோனா தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்களின் அருகில் தேவையில்லாமல் ஒன்று கூட வேண்டாம் என சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது.

பொதுவாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்களில் சாதாரணமாக நடவடிக்கை முன்னிக்கப்பட்டடு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் சில பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் இருப்பதைக் காணக்கூடியதாக அமைந்துள்ளது என சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

பொதுமக்கள் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு ஒன்று கூடுவதை முடிந்த வரை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அத்தோடு தங்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான திகதி சுகாதார பிரிவினரால் வழங்கப்படும்.

குறித்த திகதிவரை பொறுத்திருந்து கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ள வரவேண்டும்.  தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படும் என  வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.