Header Ads



சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை, அரசுக்கு விருப்பமில்லை - “ஒரு இருண்ட நாள்” என கூறியுள்ள இஸ்லாமிய குழு


சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் பெண்கள் அணியும் “நிகாப்” மற்றும் “புர்காக்கள்” உட்பட பொது இடங்களில் முகத்தை மறைப்பதற்கான தடைக்கு ஆதரவாக சுவிஸ் வாக்காளர்கள் இன்று 07.03.2021 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த திட்டத்தை வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி (எஸ்விபி) முன்வைத்தது இக்கட்சியானது “தீவிரவாதத்தை நிறுத்து” போன்ற முழக்கங்களுடன் தீவிர பிரச்சாரம் ஒன்றை செய்திருந்தது.

உணவகங்கள், விளையாட்டு அரங்கங்கள், பொது போக்குவரத்து அல்லது தெருக்கள் போன்ற பொது இடங்களில் ஒருவரின் முகத்தை மறைப்பதற்கான தடைக்கு மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மற்றும் செங்காளன் ஆகிய இரு மாநிலங்களில் முகத்தை முற்றாக மறைப்பதற்கான தடைகள் ஏற்கனவே அமுலில் உள்ள நிலையில் இன்றைய வாக்களிப்பின் முடிவின் மூலம் இத்தடை நாடுதழுவிய ரீதியில் அமுலிற்கு வரவுள்ளது.

சுவிஸ் அரசாங்கம் இந்த நடவடிக்கையை ஏற்க விரும்பாத நிலையில், ஒரு இலட்சம் கையெழுத்துகளை பெறும்பட்சத்தில் அவற்றை வாக்கெடுப்பிற்கு வரும் நடைமுறை இங்கு உள்ள நிலையில் இன்றைய வாக்களிப்பில் 51.2 வீதமானவர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இத்தடையானது சுற்றுலா துறைக்கு தீங்கு விளைவிக்கும் என்று வாதிட்டு வந்த நிலையில் 48.8 வீதமானோ இத்தடைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

8.6 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் ஒரு 50 ற்கும் குறைவான முஸ்லீம் பெண்கள் முழு முகத்தை அல்லது முழு உடலையும் மறைக்கும் வகையில் உடை அணிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் ஜெர்மன் மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள லூசெர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி சுவிட்சர்லாந்தில் யாரும் புர்கா அணியவில்லை என்றும் சுமார் 30 பெண்கள் மட்டுமே நிகாப் அணியிறார்கள் என்றும் இதன் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா பயணிகளாக வரும் அரபு நாடுகளைச் சேர்ந்த பெண்களே அதிகமாக முகத்தை மறைக்கும் வகையில் உடைகளை அணிந்து பொது இடங்களிலும் , பொது போக்குவரத்துக்களிலும் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது எதிர்காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயம் என, புலனாய்வுத் துறையினர் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநிலையில் ஒரு முன்னணி சுவிஸ் இஸ்லாமிய குழு இது முஸ்லிம்களுக்கு “ஒரு இருண்ட நாள்” என்று கூறியுள்ளதாக பிபிசி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ச.சந்திரபிரகாஷ்-


3 comments:

  1. உண்மை ஐ உடன் ஏற்றுக் கொள்ள அநேகருக்கு தயக்கம் ஏற்படும்

    ReplyDelete
  2. But unmayaana islaatta pinpattinaal, intha pirachina ethuvume illa, as per my opinion the law is correct

    ReplyDelete
  3. இப்ப இதுக்கு எல்லாம் போராட தேவையில்லை. முகத்தை தாராளமாக மறைத்து மாஸ்க் போட்டுகொண்டு செல்லலாம். அவர்களுக்கு வைரஸ் நமக்கு கலாச்சாரம். எப்படி வேண்டும் என்றாலும் எடுக்கட்டும்... நீங்கள் வேண்டிய வர்ணத்தில் மாஸ்க் போட்டு மூடி கொள்ளுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.