Header Ads



அஞ்சல் அலுவலகங்கள் திடீரென, மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவஸ்தை


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பில் அஞ்சல் அலுவலகங்கள் திடீரென மூடப்பட்டுள்ளதால் பல அலுவல்களுக்காக தபாலகங்களை நாடி வரும் வாடிக்கையாளர்கள் அவஸ்தைப்பட நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

அஞ்சல் தொழிற் சங்கங்கள் இணைந்து மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக புதன்கிழமை 31.03.2021 காலை தொடக்கம் அனைத்து அஞ்சலகங்களும் பூட்டப்பட்டுள்ளன.

அஞ்சல் ஊழியர்களின் இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கம் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வுகள் எட்டப்பததால் தாம் இந்த போராட்டத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளதாக அஞ்சலக பணி;யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும்

5 வருடங்கள் கடந்த 2ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்

கணினி தொழிநுட்பக் கோளாறுகளைச் சீர் செய்ய வேண்டும்

2012 பொறுப்புப் பரீட்சையை நடைமுறைப்படுத்த வேண்டும் பொறுப்புக் கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும்

விரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுத்தர வேண்டும்.

பொறுப்புப் பரீட்சையில் சித்தியடைந்த 1ஆம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு எம்.என். 7 வேதன மட்டத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்  என்பனவற்றுடன்  மேலும் அரசாங்கத்தின் மூடிய திணைக்கள ஆட்சேர்ப்பு முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2018ஆம் ஆண்டிலும் தொடர்ச்சியான போராட்டங்களை அஞ்சல் தொழிற் சங்கங்கள் முன்னெடுத்திருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.