Header Ads



ஜனாதிபதி கோத்தபாயவை தொலைபேசியில், தொடர்புகொண்டார் சீன அதிபர் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு


சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கை  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் இன்று - 29 - தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொலைபேசி உரையாடலின் போது இரு தலைவர்களும் முக்கியமான விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி சீன கம்யுனிஸ்ட் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளை பாராட்டியுள்ளார்.

சீன ஜனாதிபதியின் தலைமையின் கீழ் சீனா பொருளாதார அபிவிருத்தி மற்றும் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது என இலங்கை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

இலங்கைக்கான சீனாவின் பெறுமதி மிக்க ஆதரவை இலங்கை பாராட்டுகின்றது என தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி முக்கியமான விவகாரங்களில் பரஸ்பரம் ஒருவரின் நிலைப்பாட்டிற்கு மற்றவரின் உறுதியான ஆதரவை வழங்குவதற்காக இலங்கை இணைந்து செயற்பட தயாராகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.