Header Ads



கொரோனாவுக்கு முதல் இறப்பை பதிவு செய்த நாடு


தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் முதல் கொரோனா இறப்பு பதிவாகியுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2019 டிசம்பர் மாதம் தொடங்கி உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா இறப்பு பல ஆயிரங்களையும் லட்சங்களையும் தாண்டியுள்ளது.

பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் தற்போதும் நாளுக்கு 2,000 பேர்கள் வரை கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறக்கின்றனர்.

இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேகத்தில் உலகின் பல நாடுகளும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் 50 வயதான நபர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி, பிப்ரவரி 27ம் திகதி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

துறைமுகத்தில் பணியாற்றும் சீனர் ஒருவருக்கு சாரதியாக பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

பிப்ரவரியில் ஏற்பட்ட கொரோனா பரவலை அடுத்து தற்போது 1,200 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுவும், நான்கு சீன குடிமக்கள் ஹொட்டல் தனிமைப்படுத்தலை மீறியதாலையே, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கம்போடியா அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், பாடசாலைகளையும் மூடியுள்ளது.

அதிக மக்கள் கூடும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குடியிருப்பில் இருந்தே பணியாற்ற பணிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.