Header Ads



அல்லாஹ், என்னை விட்டு விடுங்கள், எனக்கு பேய் பிடிக்கல்ல - கதறிய றிப்கா (நேரடி ரிப்போர்ட், முழு விபரம்)

- Riza Fari -

மூட நம்பிக்கை உடைய சிலருக்கு அறிவு கடுகு அளவை விட சிறிது,  ஒரு தாயின் மூட நம்பிக்கையால் ,குழந்தையின் உயிர் பலியாகி விட்டது. (எழுத தோணவில்லை. ஆயினும் இது ஓரு படிப்பினைக்காக எழுதுகின்றேன்)

Fathima Rifaza வயது 37 காதல் திருமணம். மூன்று பிள்ளைகளின் தாய். சுனாமி வரை, நாங்கள் அடுத்தடுத்த வீடுகளில ஒன்றாக விளையாடி  மகிழ்ந்தவர்கள்.  அந்த வகையில் ரிபாஸா வை பற்றி சொல்லப் போனால் , அதிகம் பேச மாட்டாள். சத்தமாக சிரிக்ககூட மாட்டாள். ஒரு அமைதியான டைப்.சண்டை கூட போடத் தெரியாதவள். தொடர்ந்து 3 வருடங்களுக்குள் தாயும் தந்தையும் இறந்து விட்டதில் சிறிது மனச் சிக்கல்களுக்கு ஆளானாள்.

Rifaza வின் ஒரு சகோதரன், ஒரு சகோதரி இருவரும் கல்யாணம பண்ணி விட்டார்கள்.இவர் குடும்பத்தில் இளைய பெண்.  அரசாங்கத்தினால் வழங்கப் பட்ட சுனாமி வீட்டிலேயே Rifaza, கணவர் ,Rifkan , பிள்ளைகள மூன்று பேர்கள்,  இதில் முதல் இரு பிள்ளைகளும் இரட்டையர்கள்.

கடைக்குட்டி தான் Rifka ,

பொதுவாகவே அந்த சிறிய குடும்பத்தில் அனைவரும் நிறம் கம்மியானவர்கள் என்பதால்,    இந்த செல்லக்குட்டி மட்டும் நல்ல மா நிறம். துடிப்பானவள்.  பார்ப்போர் மனங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு  வாயாடி, தந்தையின் செல்லம். எப்போதும் தந்தையுடன் இருக்கவே விரும்புவாள். 

ஆனபோதும் மகளுக்கு அவர் தான் ஹீரோ.இறைவனின் படைப்பில் ,தந்தை  மகள் உறவென்றாலே அது தானே  இயற்கை. இந்த செல்லக்குட்டி ரிப்காவை தந்தையின் நண்பர்கள் முதல் அந்த ஏரியாவில் உள்ளவர்கள் அனைவரும் இவளது சுட்டித் தனமான பேச்சைக் கேட்கவே மிகவும் நேசிப்பவர்கள். ஆட்டோ சாரதி, அன்றாடங்காய்ச்சிகளானாலும் , ஏதோ ஒரு வகையில் அந்த குடும்பம் யாருக்கும் தொந்தரவின்றி வாழ்ந்து வந்தது.

இந்த நிலையில், அந்த குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வேர் விடத் தொடங்குகிறது.  இயற்கையிலேயே இந்த rifaza  , சாஸ்திரம் பார்ப்பது, வீடு காவல் படுத்துவது,  நோய் துன்பம் என்றாலும், வீட்டில் பிரச்சினைகள் என்றாலும்,  மருந்து மாத்திரைகளோ , ஆலோசனைகளோ பெறுவதை விட,  மாந்திரீகம், இஸ்ம் ,துஆக்கள் போன்ற மகா மூடப் பழக்கம் வாழையடி வாழையாக இவர்களை எப்போதும் தொடர்ந்து வந்தது.

இது பற்றி யாராவது அறிவுரைகள் கூறினாலும் அதற்கு காது கொடுக்கும் அளவிற்கு கூட அவர்கள் இல்லை. அந்தளவிற்கு மூட நம்பிக்கைகளில ஊறிப் போனவர்கள். வீட்டில் கணவர் சண்டை,,பிரச்சினை ,  ,   Rifaza  அன்பாக சொல்லி பார்த்தார், அதிகாரம் பண்ணியும் பார்த்தார். 

எனினும் தனக்கும் தன் கணவனுக்கும்  பொருத்தமின்றி போக, அந்த வீட்டில் வாஸ்து தோஷம்  என்றே எண்ணும் அளவிற்கு முட்டாளாகிப் போன rifaza , தன் தந்தையின் சகோதரி மல்வானை யில் இருப்பதால், சுமார்  30 இலட்சம் ரூபாய் பெறுமதியான  தன் வீட்டை , 17 இலட்சங்களுக்கு , அதுவும் அத்தனையும் முஸ்லிம்கள் வாழும் 36 வீடுகள் கொண்ட அபார்ட்மென்டில் , ஓரு பெரும்பான்மை குடும்பத்திற்கு விற்று விட்டுச் சென்றதால் , (அந்த  மீதி 35 வீட்டு மக்களின் அதிருப்திக்கும் ஆளாகி விட்டார்.)

3 பிள்ளைகளோடு மல்வானை சென்ற Rifaza , அங்கு ஓரு சிறு வீடு வாடகைக்கு எடுத்து  எட்டு மாதங்களாக குழந்தைகளோடு வசித்து வந்திருக்கிறார். தன் தந்தையின் சகோதரி இருக்கும் இடத்தில் வாழச் சென்ற இவருக்கு , அப்போது தான ஓரு சூனியக்காரியின் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இவர் இந்து மதத்தில் இருந்து  இஸ்லாத்தை தழுவியவரென்றும்  , ஆனால் இந்த பெண்ணின் கணவர் ஒரு இந்து என்றும் கூறப் படுகிறது. இந்தப் பெண் இரவானால், தான் பேய் விரட்டுவதாகவும், 

தனக்குள் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், அடிக்கடி காளியம்மா தன் உடலில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், எப்பேர்ப்பட்ட வியாதியையும் தன்னால் குணமாக்கும் சக்தி இருப்பதாக பிதற்றி வருவதால் இந்த சூனியக்காரியிடம் இருந்து ஊர் மக்கள் விலகியே நின்ற போதும்,

மூட நம்பிக்கைகளில் ஊறிப்போன ரிபாஸாவுக்கு மட்டும்  , இந்த சூன்யக்காரியின் உறவு, குமபிடப் போன தெய்வம் குறுக்கே வந்த கதையாகி விட்டது. சம்பவ தினத்திற்கு இரண்டு நாட்கள் முன், குழந்தைகளை காலிக்கு அழைத்து வந்துள்ளார். இப்படி அடிக்கடி வந்து ,குழந்தைகளின் தந்தையிடம் செலவுக்கு பணம் வாங்கிச செல்வதாக ஒரு செய்தியும்  கேள்விப். பட்டாலும்.(இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.)

இந்த நிலையில் கடந்த வாரம் இவர் பிள்ளைகளோடு கடைசியாக வந்து,    மகனை ஓரு மத்ரசாவில் சேர்த்து விட்டிருக்கிறார். என்றுமில்லாதவாறு மூத்த  மகளை தன் மாமியாரிடம் (கணவரின் தாயாரிடம) விட்டு ,  தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக கூறி , கடைக்குட்டி 9 வயது rifka வை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளதும், இது திட்டமிடப்பட்ட செயலாகவும் எண்ணத் தோன்றுகிறது.

காலிக்கு வந்த நேரத்தில் தன் தாயின் சகோதரியிடம் சில எதிர்வுகளை கூறிச் சென்றிருக்கின்றார். அதாவது இறந்து போன தன் தாய் தந்தை அடிக்கடி கனவில் வந்து போவதாகவும் ,அவர்கள் ஏதோ எச்சரிக்கை விடுவதாகவும், தான் ஒரு குறி சொல்லும் பெண்ணிடம் இது பற்றி சொன்னபோது , விரைவில் தன் குடும்பத்தில் ஓரு உயிர்ப்பலி நடக்கப் போவதாக குறி சொல்லும் பெண் கூறியதாகவும், ஏதேதோ கதைகள் கூற ,  நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் அவர் கதைகளை கேட்டு விட்டு சிரித்துக் கடந்து விட்டனர் உறவினர்கள்.

ரிப்கா என்ற பிஞ்சுக் குழந்தை கனவில் பேசுவதாகவும், தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதாகவும் ரிபாஸா தன் சகோதரியிடம் கூறி கவலைப் பட்டும் உள்ளார். இத்தனையும் வெள்ளிக் கிழமை நடந்தவை. குழந்தையை அடுத்த நாளே பேய் விரட்டச் சென்றுள்ளார்.

Rifaza ,  சில மூடத் தனமான செய்வினை, சூனியம் போன்ற கைங்கரியங்களிலும் அயராத  நம்பிக்கை கொண்டவர் என்பதை நன்றாக தெரிந்து கொண்ட இந்த சூனியக்காரி ,  குழந்தையின்(தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும்) இந்த செயல்களுக்கு காரணம் , இறந்து போன ஓரு ஆத்மா இந்த குழந்தையை இரவில் ஆட்டிப் படைப்பதாகவும் , அந்த ஆத்மாவை விரட்டியடிக்கு தன்னால் இயலும் எனக் கூற,

 அந்த 9 வயதுக் குழந்தை ரிப்காவை , தலை மொட்டையடித்து , குளிப்பாட்டி பக்தியோடு அழைத்துச் சென்றுள்ளதாக அக்கம் பக்கத்து மக்கள் கவலையோடு கூறியிருக்கும்  கருத்து. 

சனிக் கிழமை பகல் 12 மணியளவில் அந்த குழந்தையின் முதல் அலறல் கேட்டுள்ளது. 

"ஆன்ட்டி என்னை அடிக்காதீங்க. எனக்கு எந்த பேயும் பிடிக்கல்ல. அல்லாஹ் என்னை விட்டு விடுங்கள்..." என்றே கேட்டுள்ளது.  ஊர் மக்களே தள்ளி வைத்த ஒரு சூனியக்காரி வீட்டுக்கு, 

பெத்த தாயே குழந்தையை பேய் விரட்ட அழைத்துச் சென்றதால் ,  இதில் மற்றவர்க்கு கவலைப்பட என்ன இருக்கிறது என்ற எண்ணத்திலே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அமைதியாக இருந்தாலும், மாலை ஆறு மணி வரையில் கேட்ட  குழந்தையின் அலறல் திடீரென்று நின்று போனதும்,

மூடியிருந்த வீட்டில் இருந்து இரண்டு ஆண்கள் பதற்றத்தோடு வெளியே போனதும் மீண்டும் வந்த்தும்,  இரவு 10 மணிக்கு ,திடீரென முகம் தெரியாத ஆட்டோக்கள் வந்து போனதும் ,  அங்கிருந்த ஒரு இளைஞருக்கு சந்தேகம் ஏற்பட, உடனடியாக 119 க்கு அழைத்துள்ளார்.

அதற்கிடையில் குழந்தையின் தாயும், சூனியக்காரியும், அவளது கணவரும்  ஆட்டோவில் குழந்தையை அள்ளிட்டு ஆஸ்பத்திரி ஓட, அங்கே பரிசோதித்த மருத்துவரோ இந்த குழந்தை கொலை செய்யப் பட்டுள்ளதென்றும்,  இறந்து மூன்று மணிக்கும் மேல் ஆகிறதென்றும், உடனடியாக போலீஸ் ஐ வரவழைத்துள்ளார்.

அதற்குள்  குழந்தையை தாயுடன் இருத்தி விட்டு , சூனியகாரியும் அவள் கணவரும் வீட்டுக்கு போய் தடயங்களை அழிக்க முனைந்த வேளையில்,  119  போலீஸ் அதிகாரிகள் வந்து விட்டனர்.

குழந்தையை அடித்தே கொலை செய்யப்பட்ட தடங்கள்  இருப்பதை கண்டு பிடித்தனர்.

(பேய் ஓட்டுவதென்ற பெயரில் குழந்தையை நரபலி கொடுக்கப் பட்டுள்ளதாகவே தோன்றுவதாக  அங்குள்ள பொது மக்கள் கருத்து.) 

அதற்கு இந்த மூட நம்பிக்கையில் ஊறிப் போன முட்டாள் தாயும் துணை போனாளா, இல்லை விபரீதம் தெரியாமல் மாட்டிக் கொண்டாளா , அல்லது வேறு ஏதாவது சூழ்ச்சிகளா? மர்ம முடிச்சுகள் அவிழும் போது , இன்னும் என்னென்ன அகோரங்கள் கேள்விப் பட உள்ளோம்  என்பது அல்லாஹ்வே அறிந்தவன்.

நேற்றிரவு  -01-  ஊரிலே ஜனாசா அடக்கம் செய்யப்பட்டது. ஒட்டுமொத்த ஊரும் சுனாமிக்குப் பின் கலங்கி அழுத இரவென்றால் , இதுவாகத் தான் இருக்கும். வரலாற்றில் இதற்கு முன் நிகழ்ந்த்தா இல்லையா தெரியாது. ஆனால் இது போன்ற கொடுமைகள் இனியும் கேள்விப் படாமல் இருக்க வேண்டும்.

இறைவனின் விளையாட்டு , ஒரே இரவில் சுக்ரா முனவ்வர் இந்த ஊரையே பெருமையா  பேச வைத்தாள்...  ஓரே இரவில் சுட்டிக் குழந்தை ரிப்கா முழு ஊரையும் அழ வைத்துச் சென்று விட்டாள்...

இந்த நிலைக்கு யார் காரணம்? அந்த தந்தை குழந்தையை நினைத்து கதறுகிறார்.  அது அவரது தந்தைப் பாசம்.  ஆயினும்  அவர் ஒழுங்காக இருந்திருந்தால், ஓரு வேளை இந்த நிலை ஆகி இருக்குமா? மனைவியை தவிர்த்து வேறொரு பெண்ணின் மீது ஏற்பட்ட மோகம்,  இந்த குடும்பத்தை சிதைச்சது. அதுவரை ஓழுங்காக வாழ்ந்த குடும்பம் ,குடிகாரனாக இருந்தாலும் அனுசரித்து வாழ்ந்த பெண், தன் கணவன் வேறொரு பெண் பங்கு போடுவதை சகித்துக் கொள்ள முடியாமல் போவது இயற்கை தானே.

அடுத்த தவறு ,  அந்த பெண்ணின் கண்மூடித் தனமான மூட நம்பிக்கை.  படைத்தவனை நம்பவில்லை,  இறைவனின் விதியை நம்பவில்லை,  அமல்கள் செயவதில்லை , மருந்து மாத்திரைகள் கூட ஒத்து வருவதில்லை.  ஆன்னா ஊன்னா , பூசாரிகளை தேடிப் போவதும், நம்பூரிதிகளை நம்புவதும்.மாந்திரீகங்கள் செய்வதும்..   கடைசியில் பெற்ற குழந்தையே பறி கொடுக்க வேண்டிய பரிதாபம்.

இனி அவள்  நடமாடும் பிணம் தான்.  இந்த குழந்தையின் விதியை தேடிக் கொடுக்க, தாயும் தந்தையுமே காரணமானவர்கள்.  ரோஜாக்களை எதிர்பார்த்து வெகு சிரத்தையுடன் உரமிட்டு முட்களை வளர்த்து, ஆளாக்கும் விசித்திரம் தான் இவரகள் வரையில் வெற்றிகரமான வாழ்க்கை என நினைத்துக் கொண்டு விட்டார்கள் போலும், இந்த கொடூர தாயும் தந்தையும்.

2 comments:

  1. Very Sad story.. Many good Lesson to learn from this sad incident...

    ReplyDelete
  2. சமூகத்துடன் ஒட்டு உறவில்லாமல் இருப்பது அல்லது எதிலும் எதிர்த்தர்க்கம் புரிவது,மந்திரம் சாஸ்திரங்களில் அதிக நம்பிக்கை வைப்பது,கற்பனையான விடயங்களைப் பேசுவது போன்றவை மனச்சிதைவின் அறிகுறிகளாகும். இவர்கள் பற்றி உற்றார் உறவினர்கள் அயலவர்ககள் அவதானமாக இருக்க வேண்டும். இதில் முதலாவது குற்றமிழைத்தவர்ககள் அக்கம் பக்கத்தில் இருந்துகொண்டு அலரல் சத்தம் கேட்டும் நடவடிக்கை எடுக்க அவசரம் காட்டாத அயலவர்ககள். குழந்தையின் தாயும், பேயோட்டியும் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியம் அதிகம் என்பதால் அவர்கள் சுயநினைவற்றவர்களாகவே கருத வேண்டியுள்ளது. குடும்பத்தில் அப் பெண் கலந்துரையாடிய விடயங்கள் மிகவும் கரிசனைக்குரியது அப்பெண்ணின் குடும்பத்தில் ஒரு புத்திசாலியாவது இருந்திருந்தால் அவரின் மனநிலை அபாயத்தை அறிந்து ஏற்ற நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஒவ்வொருவரும் அசாதாரணமான நடவடிக்கைகள் கொண்டோர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது சமூகக் கடமையாகக்கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.