Header Ads



முஸ்லிம் சட்டங்களை மாற்றி தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் - அசாத் சாலி


- TWin -

பணம் இருந்தால் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார் என்பதற்காக குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றிக் கொள்ள முடியாது.

அவ்வாறு சட்டங்கள் மாற்றப்பட்டாலும் அதனை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைமையைச் சட்டங்களினால் மாற்றிவிட முடியாது.

முஸ்லிம் ஆண் ஒருவர் தனது பண வசதிக்கு ஏற்ற வகையில் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றார்.

அதில் எவ்வித தவறும் கிடையாது. செல்வம் இருக்கும் ஓர் ஆண் வசதி குறைந்த சில பெண்களைத் திருமணம் செய்து அவர்களைப் பராமரிப்பதில் தவறில்லை.

முஸ்லிம் சட்டங்களை மாற்றி தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். இனவாத அடிப்படையிலேயே இந்த சட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.

2 comments:

  1. appreciate your brave to tell the truth! May allah guide and help you Mr. Asath Sali

    ReplyDelete
  2. இத்தகைய விவாதங்களை பகீரங்கமாக முன்வைப்பதா தவிர்ப்பதா சரியான இராசதந்திரம் என்பது புரியவில்லை. எனினும் 1920 பதுகளில் இருந்தே முஸ்லிம் நாடுகளில் பலதார மணம் பற்றிய விவாதம் இடம்பெற்று வருகிகின்றது. 1926லேயே துருக்கியில் பலதாரமணம் தடுக்கபட்டது. இன்று மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய முஸ்லிம் நாடுகளிலும் பலதார திருமணம் தடை செய்யப் பட்டுள்ளது. இன்னும் ஆபிரிக்க அரபிய முஸ்லிம் நாடுகள் பலதார மணத்தை அங்கீகரிக்கின்றது. மலேசியா சிங்கபூர் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பலதார மண தடையில் முஸ்லிம்களுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது. இந்த விலக்கு இப்போது கேழ்விக்கு உள்ளாக்கபட்டுள்ளது. இது தொடர்பான விவாதங்களைப் பொது வெளியில் வைக்கும்போது பல்வேறு சர்வதேச முஸ்லிம் நாடுகளின் முஸ்லிம் சமூகங்களின் நிலைபாடுகளை, பின்னணியை ஆராய்ந்து உள்வாங்குவது முக்கியம்.

    ReplyDelete

Powered by Blogger.