Header Ads



இலாப நோக்கற்ற ஹலால் பிரிவின் சேவைகள்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக முன்னாள் கடமையாற்றிய அல் ஹாஜ் ஏ.ஆர்.எம். பைஸல் ஆகிய நான் ஹலால் பரிவு பற்றிய சில தெளிவுகளை வழங்கவேண்டிய கடமைப்பாட்டினை உணர்ந்தவனாக இதனை எழுதுகிறேன்.

நான் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவன்ள பைரஹா பார்ம் நிறுவனத்தில் 06 ஆண்டுகள் முகாமையாளராகவும் சுமார் 05 வருடங்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் பிரிவின் நிறைவேற்றுப் பொறுப்பதிகாரியாக இருந்த நான், பறவைகள், கால்நடைகள் வளர்புப் பற்றிய பூரணமான அறிவும் அனுபவமும் உள்ளவன்.  

ஹலால் சான்றிதழ் ஏன் தேவைப்பட்டது?

1978 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலும் சர்வதே மட்டத்திலும் திறந்த பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்பட்டது. அதன் விளைவாக உணவுப் பொருட்களின் ஹலால் தன்மையை உறுதிப்படுத்தும் அவசியமும் தேவையும் ஏற்பட்டது. உணவில் மனிதமுடி, பன்றியின் எலும்பு மற்றும் கொழுப்பு போன்றன பயன்பாட்டுக்கு வந்தன. அதனை மையப்படுத்தி இஸ்லாமிய நாடுகளல்லாத தென்னாபிரிக்கா, தேரவாத பௌத்த தர்மத்தைப் பின்பற்றும் தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் ஹலால் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகள் தோற்றம் பெற்றன. 

இலங்கையில் 1992 ஆம் ஆண்டளவில் குறிப்பிட்ட ஒரு குழுவினர் னுச. காஸிம் (நுலந ளுpநஉயைடளைவ) அவர்களது தலைமையில் (அவர்கள் தற்போது 80 அல்லது அதனைவிடவும் அதிகமான வயதை எட்டியிருப்பார்கள் என்று நம்புகிறேன்) ர்யடயட குழழன யுறயசநநௌள ஊழஅஅவைவநந (ர்குயுஊ) ஹலால் உணவு விழிப்புணர்வு குழு என்ற அமைப்பை ஆரம்பித்தனர். இது பற்றிய தகவல்களை அல் ஹாஜ் தாரிக் மஹ்மூத் (ஆ.ளுஉ)இ அல்லது கலாச்சார அமைச்சின் முன்னாள் அதிகாரிகளிடமும் பெற்றுக்கொள்ளலாம். 

ஹலால் சான்றிதழின் தரநிலை

மிகவும் பொறுப்பு வாய்ந்த ஹலால் சான்றிதழ் வழங்களை அங்கீகரிகப்பட்ட ஹலால் தரநிலைகள், முறையான நிர்வாகக் கட்டமைப்பு, சன்மார்க்க வழிகாட்டல்கள், உணவுத்துறைசார் நிபுனர்களின் ஆய்வு மற்றும் பரிசீலனை, தொடரான கண்கானிப்பு முறை, பொருத்தமான முகாமைத்துவ உத்தியோகத்தர்கள்; இல்லாமல் சர்வசாதாரணமாக வழங்கமுடியாது. 

உதாரணமாக : (ஊழnஎநலநச டீநடவ) இயந்திரத்தில் தொங்கவிடப்பட்டு; நாளாந்தம் சுமார் 25,000, 30,000, 40,000 கோழிகள் முஸ்லிம்களால் அறுக்கப்படுகின்றன. இதனை அறுப்பவர், இஸ்லாமிய வழிகாட்டலின் பிரகாரம் செயற்படக்கூடியவராகவும் மனிதர்களுக்குத் தீங்குவிளைவிக்காத அடிப்படையில் விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட முறையில், ஜீவகாருண்யம் பேணப்பட்டு அறுக்கப்படுகின்றனவா? என்பன 100மூ வீதம் அவதானிப்பது அவசியமாகும். 

ஹலால் சான்றிதழ் வழங்கல்

2000 ஆம் ஆண்டு மர்ஹூம்களான அஷ் ஷைக் முபாரக், அஷ் ஷைக் ரியாழ் ஆகியோரின் காலத்தில் ஜம்இய்யா இரண்டு (02) கோழி அறுப்பு கம்பணிகளுக்கு மாத்திரமே சான்றிதழ் வழங்;கி இருந்தது. 

2002.04.03 ஆம் திகதி இலங்கை பாராளுமன்ற டெண்டர் கமிட்டி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடமிருந்து இருந்து, ஹலால் சான்றிதழை பெற்றுவருமாறு மாமிச சந்தைப்படுத்துனரைக் கோரும் அளவிற்கு இதன் தேவை அதிகரித்தது. 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் அங்கீகரிகப்பட்ட ஹலால் தரநிலைகள், நடைமுறைகளைப் பின்பற்றியே செயல்பட்டது.

ஹலால் சான்றிதழ் வழங்கல் இலாப நோக்கற்ற சேவை

ஹலால் சான்றிதழின் மூலமாக இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஒரு பரந்த சேவையாகவே இது நோக்கப்பட்டது.

தேசியப் பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் இலாபம் மற்றும் நுகர்வோர் பயன்பாடு என்பன நோக்காகக் கொள்ளப்பட்டனவே தவிர, எவ்விதமான இலாப நோக்கும் கொள்ளப்படவில்லை. கடந்த 2004 இல் இருந்து 2010 வரையிலுமான காலப்பகுதியில் உள்ளடங்கிய வரவு, செலவு கணக்குத் தணிக்கை இதனை மிகவும் தெளிவாக உறுதி செய்கின்றது என்பது போதிய சான்றாகும்.

எந்த ஒரு கம்பணியையும் நாம் தேடிச்சென்று சான்றிதழ் பெறுமாறு ஒரு போதும் தூண்டவில்லை. மாறாக பிரதானமான பெரிய பல கம்பணிகள் எம்மை அனுகியே வந்தன. ஹலால் அத்தாட்சிப்படுத்திய பின்னர் நூறு முதல் ஆயிரம் மடங்கு வரை தமது வியாபாரம் அதிகரித்ததாக பல வர்த்தக நிறுவனங்கள் அறிவித்திருந்தன. ஹலால் பிரிவு எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கட்டணத்தை ஒரு கட்டணடமாகவே பொருட்படுத்த முடியாதுள்ளதுளூ அது ஒரு மிகவும் குறைந்தளவு சிறுமையான தொகைதான் என்று துழாn முநநடடள நிறுவனத்தின் தலைவர் திரு. சுஸன்த ரத்னாயக்க அவர்கள் ஒரு கூட்டத்தில் பகிரங்கமாகவே குறிப்பிட்டார் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.

ஹலால் அத்தாட்சிப்படுத்தல் அமுல்படுத்தத் தொடங்கியதன் பிற்பாடு, நாட்டுக்கு வருடாந்தம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இலாபம் கிடைக்கப. பெறுகிறது.

ஹலால் பிரிவின் செயற்பாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் பிரிவு தனியாக இயங்க ஆரம்பித்தாலும் அதன் செயற்பாடுகள் வெறுமனே ஆலிம்களை மாத்திரம் கொண்டதாக ஒரு போதும் அமைந்திருக்கவில்லைளூ அவ்வாறு அமைவது அசாத்தியமானதும் கூட. ஆலிம்களைப் பொருத்த வரையில் அவர்கள் சமயம் சார்ந்த வழிகாட்டல்கள் மாத்திரமே வழங்கினர்.

நான் ஹலால் பிரிவினைப் பொறுப்பேற்ற போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக அஷ் ஷைக் ரிஸ்வி முப்தி அவர்களும் அதன் பொதுச் செயலாளராக இருந்து அனைத்து ஹலால் விடயங்களையும் அஷ் ஷைக் எச். அப்துல் நாசர் அவர்கள் கவனித்துவந்தார்கள். எனினும் பிற்பட்டகாலத்தில் இக்குழுவின் தலைவராக மர்ஹூம் அஷ் ஷைக் எம்.எம்.ஏ. முபாரக் ஹழ்ரத், செயலாளராக அஷ் ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத்; அவர்களும்,  குழுவின் உறுப்பினர்களாக அஷ் ஷைக் ஏ.எம். அப்துல் அஸீஸ், அஷ் ஷைக் முப்தி அஹ்மத் மபாஸ், அஷ் ஷைக் முப்தி அமானுல்லாஹ், அஷ் ஷைக் முப்தி ரயீஸ், அஷ் ஷைக் எம்.எல் இல்யாஸ், அஷ் ஷைக் ஸபீர் மற்றம் அஷ் ஷைக் ரி. ஹதைர் அலி போன்றோர் செயற்பட்டனர். நான் இப்பொறுப்பில் இருந்து ஒதுக்கிக்கொண்டதன் பின்னர் அஷ் ஷைக் முர்ஷித் முளப்பர் அவர்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டார்கள்.

மேலும் இக்குழுவின் துறைசார் அங்கத்தவர்களான அல் ஹாஜ்  தாரிக் மஹ்மூத் MSc (Agri) எம்.என்.ஏ. முபாரக் B.sc Sp Chem M.Sc (Delft), Dr. எம்.ஏ.சீ.எம் சர்ஜூன் ஹாபிஸ் (BVSc, BICS, FICS), Dr. நஸீர், எம்.ஜே.எம். பாரி BSc (Agri), M.Phil (Food Sci & Tech) எம்.எல்.எம். பஸ்லின் B.Sc (Food Sci & Tech),  சீ.எஸ்.எம் ஹனீபா B.Sc (Agri), Dr. நாஸிர் B.Sc, M.Eng, PhD, எம்.எச். சலீம்தீன் AMPA (UK) போன்றவர்கள் கூட்டாக இணைந்து பணியாற்றினர்.சமூக நலநன மையமாகக் கொண்ட இப்பாரிய பணியின் நடவடிக்கைகள் பற்றி எவ்வித அறிவும், தெளிவும் இல்லாமல் தேவையற்ற வீண் சந்தேகங்களையும் பொய்யான வதந்திகளையும் சிலர் அண்மைக்காலமாக சமூக வலையத்தளங்களில் பரப்பி வருவதையிட்டு மிகுந்த வேதனை அடைகின்றேன்.

அவ்வாறு ஹலால் பிரிவின் நடவடிக்கைகள் பற்றிய போதிய அல்லது மேலதிகமான தெளிவினை கோருவோருக்கு அது பற்றிய முழுமையான தெளிவினை தருவதற்கு நான் எனது முதுமையிலும் (80 வயது) எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றேன் என்பதை நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறியத்தருகிறேன். 

அதன் செயற்பாடுகள், தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கைகள் பற்றிய போதிய மேலதிகத் தெளிவுகளைப் www.hac.lk, இணையத்தினூடகவோ  info@hac.lk என்ற மின்னஞ்ஞலூடாகவோ அல்லது தற்போதைய காரியாலயத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் உறுதியாகச் சொல்லிக் கொள்கின்றேன். அவ்வாறான தெளிவுகள் இல்லாமல் எமது ஒரு சமய நிறுவனத்தின் மீதோ, ஒரு தனிநபர் மீதோ பொய்யான அபாண்டங்களை மக்கள் மத்தியில் பரப்புவது மிகப்பெரிய பாவமும் அல்லாஹ்வின் தண்டனைக்குக் காரணமுமாகும். நாம் ஈமான் உடையவர்கள் என்ற அடிப்படையில் மிகவும் பொறுப்புடனும் நிதானமாகவும் நடந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.

அல் ஹாஜ் ஏ.ஆர்.எம். பைசல்

முன்னாள் நிறைவேற்று அதிகாரி,

ஹலால் அத்தாட்சிப் பிரிவு,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

faizalarm1965@gmail.com

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

2 comments:

  1. கட்டணம் அறவிட்டு இருக்க கூடாது

    ReplyDelete
  2. சமூகத்துக்கு ஒரு தொல்லையை இழுத்து வைத்துவிட்டு சும்மா சமாதானம் கூற வராதீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.