Header Ads



இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்க, நிதியுதவி வழங்கியவர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்


இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்க நிதியுதவி வழங்கிய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் பாணந்துரை- கெசல்வத்த பகுதியிலிருந்து போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சந்தேகநபரின் வங்கிக் கணக்குக்கு டுபாயிலிருந்து அதிகளவான பணம் அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நிதியில் ஒரு தொகுதி இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்காக சில அமைப்புகளுக்கு வழங்கியுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென்றும் இதற்கமைய சந்தேகநபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இல்லாத இஸ்லாமிய தீவிரவாதத்தை எப்படி ஊக்குவிக்கிறது!!!!
    ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லுவதால் அது உண்மையாகி விடும் என்று கருதுகிறார்கள் போலும்

    ReplyDelete

Powered by Blogger.