Header Ads



கொரோனா தடுப்பூசியில் மைக்ரோ சிப்ஸ்கள் என கட்டுக்கதை - அடியோடு மறுக்கும் அதிகாரிகள்


கோவிட் - 19 தடுப்பூசி முலம் பொது மக்களுக்கு உடலில் மைக்ரோ சிப்ஸ்கள் பொருத்தப்படுவதாக வெளியாகியுள்ள தகவலை சுகாதார அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

கோவிட் தொற்றுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளில் மைக்ரோ சிப்ஸ்கள் இருப்பதாக ஒரு கட்டுக்கதை இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் நோய்த்தடுப்பு நிபுணர் வைத்தியர் தனுஷா தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வணிகரும், மென்பொருள் உருவாக்குநருமான பில் கேட்ஸ் அளித்த அறிக்கையை தவறாகப் புரிந்துகொண்டதன் பின்னர் இந்த கட்டுக்கதை உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும்போது டிஜிட்டல் சான்றிதழ் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து பில் கேட்ஸ் பேசியதாக வைத்தியர் தனுஷா தசநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த அறிவிப்பு தடுப்பூசியை பயன்படுத்தி மைக்ரோ சிப்ஸ்கள் பொருத்தும் முயற்சியாக சிலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தடுப்பூசிகளை எதிர்க்கும் ஒரு குழு மக்கள் மத்தியில் இருப்பதாகவும், இந்த நபர்கள் தடுப்பூசி பெறுவதைத் தடுக்க மற்றவர்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள் என்று வைத்தியர் தனுஷா தசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.