கொரோனா நெருக்கடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கடந்த 2020 புனித ரமழான் மாதம் ஜப்னா முஸ்லிம் மற்றும் AMYS நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து நடாத்திய " ரமழான் பரிசுமழை " போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களுடன் சேர்த்து சான்றிதழ்களும் வழங்கும் வைபவம் அண்மையில் AMYS நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கேள்விகளுக்கான விடை எழுதியவர்களில் முதல் பரிசை கேகுணுகொல்லயைச் சேர்ந்த A.L.அஸ்ஹர் அவர்களும் இரண்டாம் பரிசினை பாலமுனையைச் சேர்ந்த M.H.சுபைதீன் ஆகியோரும், கட்டுரைப் போட்டிக்கான முதல் பரிசினைப் ஓட்டமாவடியைச் சேர்ந்த K.L.M ஜாபிர் அவர்களும் பரிசில்களை பணிப்பாளரான மௌலவி M.S.M.தாஸீம் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் A.J.M.வாரித் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்வதைக் காணலாம்.
ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கான பரிசில்கள் அவர்களுடைய வீடுகளுக்கே தற்போது அனுப்பப்பட்டு வருவதும், இந்த ஆண்டிலும் (2021) ரமழான் பரிசுமழை போட்டி நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1 கருத்துரைகள்:
Congratulations
Post a comment