Header Ads



நாம் அழிந்தாலும் கட்சியையும், தலைமையையும், சமூகத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் - AL தவம்


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீனுக்கு செய்த அநியாயத்திற்கும் துரோகத்திற்கும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பிக்கள் அனுபவிப்பார்கள் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள்தாவது. 

அவரை அநியாயமாக கைது செய்தனர். கைது செய்வதற்கு கூறிய காரணம் சின்னத்தனமாக இருந்தது. கைதுசெய்வதற்கு கையாண்ட யுக்தி நரித்தனத்தை காட்டியது. ஒரு வீரப்பனை கைது செய்வது போல் படங்காட்டினர். 

கைது செய்யப்போகிறோம் என்று ஊடகங்களுக்கு செய்தியை லீக் ஆக்கினர். ஓடி ஒழிக்க தூண்டினர் உளவியல் ரீதியில் தாக்கினர்.

கைது செய்த முறையும் அப்படித்தான். பின்லேடனை போல பின்னிரவில் சுற்றி வளைத்தனர். பயங்கரவாதி போல பெரும் “பந்தா” காட்டினர். சதாமை போல சகட்டுமேனியாய் உந்தித் தள்ளினர். #விலங்கு போட்டனர். விடியலில் இழுத்து சென்றனர்.

சிறையில், மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை - இருட்டு அறையில் போட்டனர். #நுளம்பு தின்றது. அடிப்பதென்றாலும் எப்படி அடிப்பது. எத்தனையைதான் அடிப்பது. தலைக்குள் யோசனை. மனசில் பாரம். நுளம்புக் கடி. தூக்கம் வருமா? கண் மூடுமா? தூக்கமில்லாமல் தவித்தார். #மனசாலும் #உடலாலும் சோர்ந்து போயிருந்தார். 

கொலைகாரர்களுக்கே சாப்பாடு தினமும் வீட்டிலிருந்து வந்தது. வந்த சாப்பாடு அவர்களின் சிறை அறை வரை தேடி கொடுக்கப்பட்டது. சகோ. றிசாட் பதியூதீனுக்கு சாப்பாடு வர விடவில்லை. தப்பித்தவறி வந்தாலும் லைனில் நிற்க வைத்தார்கள். அவரே போய் அதனை பெற வைத்தார்கள்.

நிம்மதி தேவைப்பட்டது. நித்திரை போகவும் வேண்டியதாயிற்று. வைத்தியசாலைக்கு போவோம் என்று போனார். சற்று வசதியாக தூங்கவே எண்ணினார். அங்கு கட்டிலில் தாதாக்கள். அவர்கள் காலூன்றினால்தான் எதுவும் சாத்தியம் என்ற நிலை. மனசுக்குள் உடைந்து போனார். மறுபடியும் சிறை திரும்பினார்.

பாராளுமன்றம் போயாவது பார்ப்போம். சற்று சுதந்திர காற்றை சுவாசிப்போம் என்றெண்ணினார். அதிலும் தடை. அவருக்கு கொரோனா பாதுகாப்பு உடை அணிய வைத்தனர். உடல் முழுவதையும் மூடி பொலிதீன் சிறையிட்டனர். காற்று அவருக்கு மறுக்கப்பட்டது. சுவாசம் திருடப்பட்டது. மீண்டும் திறந்தவெளி சிறைக்கைதியானர். சிறையே தங்கம் என்றெண்ணினார். சிறை இருந்த நாட்கள் அத்தனையும் இத்தனை வேதனையாகவே கழிந்தது.

இத்தனை கொடுமைகளையும் தலைமை அனுபவிக்க; அத்தனையையும் அறிந்துகொண்டே; இத்தனை கொடுமைகளையும் தமது தலைமைக்கு செய்துகொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு சார்பாக; 20 க்கு கையுயர்த்திய இக்கட்சி  எம்.பிக்களை; கட்சிபோராளிகளும் ஆதரவாளர்களும் மன்னித்தால். உங்களை விட கேவலமானவர்கள் வேறு யாருமில்லை. நீங்கள் மன்னித்தாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான். உங்களையும் மன்னிக்க மாட்டான்.

சகோ. றிசாட் பதியுதீனின் கட்சி மட்டும் இல்லாதிருந்தால்; இந்த எம்.பிக்கள் இந்நேரம் பாராளுமன்றத்தில் இருந்திருப்பார்களா? மனச்சாட்சி இல்லாதவர்கள். அதிலும் ஆகக்கேவலம் என்னவெனில், இக்கட்சி யின் அம்பாரை எம்.பி சொன்னாராம் உங்களை காப்பாற்றவே கையுயர்த்தினேன் என்று.

இப்படித்தான் மு.காவில் சிலரும் தலைவரை பலி கொடுத்து; தாம் 20க்கு கையுயர்த்திய பாவக்கறையை களைந்து; புனிதர்களாக முயற்சிக்கின்றனர். நாம் மிகத்தெளிவாக அதனை எதிர்த்து நிற்கிறோம். நாம் அழிந்தாலும்; கட்சியையும் தலைமையையும் சமூகத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அரசியலுக்காக துரோகத்தை ஜீரணிக்க மாட்டோம். அதில் தெளிவாக இருக்கிறோம்.

5 comments:

  1. இந்த அம்பாறை எம்.பி படு கேவலமானவர் என்பதை றிசாட் எம்.பி இப்போதாவது புரிந்து கொண்டிருப்பாரா? றிசாட் அவர்களே! கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே!

    ReplyDelete
  2. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகின்ற கதையாய் இருக்கிறது. 20 க்கு கையுயர்த்தி அரசாங்கத்திலுள்ள வன்போக்களர்களை வலுவிழக்கச் செய்தமை மட்டுமல்ல மென்போக்காளர்களுக்கு உந்துதலை வழங்கியுள்ளதுடன் இருதரப்பினருக்கும் பகைமையை வளர்த்துள்ளது. முள்ளை முள்ளால் எடுத்த இராஜதந்திர வழி முறையாக ஏன் இதனைப் பார்க்க முடியாது. மன்னிப்புக் கேட்கச்சொன்ன தலைவர் மன்னிப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் உள்ள மென்போக்காளர்களை சக்தியடையச்செய்வதன் மூலம் வன்போக்காளர்களை பின்னடைவு செய்வதற்கான முனைப்புகளே இன்றைய காலத்தின் சிறந்த இராஜதந்திரமாக அமைய முடியும்.

    ReplyDelete
  3. எப்படப்பா? எங்கடப்பா? யார்ரப்பா? இப்பதான் கண்ண கசக்கிட்டு எழும்பினாக்கும்.

    ReplyDelete
  4. Good decision. When will it hahappening ?

    ReplyDelete

Powered by Blogger.