Header Ads



முஸ்லிம் திணைக்கள 9ஆம் மாடியை புத்தசாசன, அமைச்சிற்கு கையளிக்க அமைச்சரவை தீர்மானம்


முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திற்காக தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 9ஆம் மாடி கட்டிடத்தினை புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சிற்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம்,  திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – 10, டீ.ஆர் விஜயவர்த்தன மாவத்தையில் உள்ள இந்த 9 மாடிக் கட்டிடமே புத்தசாசன அமைச்சிற்கு வழங்கப்படவுள்ளது.

புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சு, அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் பல இடங்களில் செயற்பட்டு வருகின்றன.

குறித்த நிறுவனங்கள் அனைத்தினையும் ஒரு கட்டிடத்தில் நடத்திச் செல்வதற்கான தேவை தற்போது எழுந்துள்ளது. இதற்கு பொருத்தமான இடமாக முஸ்லிம் சமய விவகார மற்றும் கலாசார திணைக்களத்திற்காக  தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற 9ஆம் மாடி கட்டிடம் இனங்காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த திணைக்கள கட்டிடத்தினை  புத்தசான அமைச்சிற்கு கையளிக்க அமைச்சரவை தீர்மானித்தது. அத்துடன்  தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்தவுடன் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சு, அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை இங்கு தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மீள்பார்வை

6 comments:

  1. HaA piece Earavuraium கொடுத்து சாதனை படைத்த மண்ணின் மைந்தர் ஆகட்டும்

    ReplyDelete
  2. இது என்னடா இப்போது இறங்கு வரிசையில் கைப்பற்றுகிறார்கள். இப்போது 9 அடுத்தது 8.... 7.... என்று முழுத் திணைக்களத்தையும் பிடித்துக் கொள்வார்கள். ஒரு காலத்தில் முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களமாக இருந்து அமைச்சாக மாற்றப்பட்டது. பின்னர் மீண்டும் புத்தசாசன அமைச்சின் கீழ் திணைக்களமாக மாற்றப்பட்டது. எதிர்காலத்தில் புத்தசாசன அமைச்சின் கீழ் வருகின்ற ஒரு திணைக்களத்தின் ஒரு பிரிவாகவும் (Division) மாற்றப்படலாம் (தரமிறக்கப்படலாம்) அல்லாஹு அஃலம்.

    ReplyDelete

  3. செய்யப்பட வேண்டிய ஒன்றுதான். கொழும்பிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் கட்டடம் கட்டுவதற்கான "காணி" இல்லாமையின் காரணமாகவும் அப்படியான கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க அரசிடம் "பணம்" இல்லாமையினாலும் இப்படியான முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். கடைசியாக ஒட்டகத்திற்கு அதன் மூக்கை மாத்திரம் கூடாரத்தினுள் உள்ளிட அனுமதித்த கதையாக மாறாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  4. Well, it’s a very good finding. Then where will be the Dept. of Muslim Religion & Affairs shifted?

    ReplyDelete
  5. Well, it’s a very good finding. Then where will be the Dept. of Muslim Religion & Affairs shifted?

    ReplyDelete
  6. எதையாவது எழுதத் தோன்றுகிறது.

    ஆயினும் 4 ம் மாடி ஞாபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete

Powered by Blogger.