Header Ads



626 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த தீர்மானம்


626 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

1,000 தேசிய பாடசாலைகளை நிறுவும் அரசின் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது 374 தேசிய பாடசாலைகளே உள்ளன.

தேசிய பாடசாலைகளாக புதிதாக பெயரிடப்படும் பாடசாலைகளுக்கு தேவையான கட்டடங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.