Header Ads



அவதூறு கூறியதற்காக 50 மில்லியன் ரூபா நட்டஈட்டை கோரி, நளின் பண்டாரவிடம் அரச புலனாய்வு பணிப்பாளர் கடிதம்


அவதூறு குற்றச்சாட்டின் பேரில் தமக்கு 50 மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்கக்கோரி அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாராவுக்கு சட்டக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமது வாடிக்கையாளரான சுரேஸ் சல்லேவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பணம் செலுத்தத்தவறினால் நளின் பண்டாரவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலேயின் சட்டத்தரணி சட்டக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சல்லே மீது குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில் நளின் பண்டார, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் முக்கியதாரி சஹ்ரானுக்கு, மேஜர் ஜெனரல் சல்லேவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டும் உள்ளடங்குகிறது.

மேஜர் ஜெனரல் சல்லே இந்தியாவில் இராணுவப் படிப்பை முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் நளின் பண்டார சுமத்தியிருந்தார்.

எனினும் இதனை மறுத்துள்ள சல்லேயின் சட்டத்தரணி இராணுவப் படிப்பை தமது வாடிக்கையாளரான சல்லே முடித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.