Header Ads



33 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் அக்பர் வித்தியாலய ஸ்தாபக அதிபர் ஜிப்ரி.


(றாசிக் நபாயிஸ், பி.எம்.எம்.ஏ.காதர்)

பெரியநீலாவணை அக்பர் வித்தியாலய ஸ்தாபக  அதிபர் அல்-ஹாஜ் அபூபக்கர் முஹம்மது ஜிப்ரி அதிபர் அவர்கள் தனது 33வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் "வாழும் போதே வாழ்த்திடுவோம்" என்ற எண்ணக்கருவில் சேவை நலன் பாராட்டு விழா  பாடசாலையின் 

தற்போதைய அதிபர் எம்.சி.எம்.மபாஸ் தலைமையில் (16) நடைபெற்றது.

2012.01.01இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 09 வருடம் ஸ்தாபக

அதிபர் நிலையில் இருந்து எல்லா வகையிலும் மாணவர்களின் கல்விக்கு உரமூட்டி பல வெற்றிகளையும் கண்ட இவரை அக்பர் கல்விச் சமூகம் குடும்பத்துடன் அழைத்து பாராட்டும், நினைவுப் பரிசில்களும் வழங்கி கெளரவப்படுத்தியது. இதன் போது அவர் பற்றிய விஷேட உரையை 

ஓய்வு நிலை அதிபர் எம்.சி.அஹமது முகைதீன் நிகழ்த்த, 

சிறப்பு நினைவுரையை கலாநிதி சத்தார் எம்.பிர்தெளஸ், அதிபரின் ஆளுமைகள் பற்றி பாடசாலையின் அபிவிருத்தி சங்கச் செயலாளர் யூ.எல்.எம்.சஜீத் (மெளலவி) நிகழ்த்தினார்.

பாடசாலைச் சமூகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பெரியநீலாவணை ஷரிபுத்தீன் மகா வித்தியாலய முன்னாள் ஓய்வு நிலை அதிபர் எம்.சி.அஹமது முகைதீன், கெளரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும் இப்பாடசாலையின் மேம்பாட்டு இணைப்பாளருமாகிய

கலாநிதி சத்தார் எம்.பிர்தெளஸ், அக்பர் வித்தியாலய ஸ்தாபகர் வை.எல்.எம்.அன்ஸார், அக்பர் வித்தியாலய ஓய்வு நிலை ஆசிரியர் ஏ.எச்.எம்.நாஸர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மஸ்ஜித்துல் அக்பர் பள்ளிவாசல் நிறுவாகிகள், அக்பர் கிராம சமூக மேம்பாட்டு அமைப்பு, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள்  என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.