Header Ads



சுவிட்சர்லாந்தில் 3.2 றிச்டர் நிலநடுக்கம்


சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் உட்பட பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 14.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வெடிப்பு சத்தத்துடன் உணரப்பட்ட நிலநடுக்கம் 3.2 றிச்டர் அளவுகளைக் கொண்டது எனவும் , சுமார் 3 தொடக்கம் 6 செக்கன்கள் வரை உணரப்பட்டதாக  செய்தியாளர் சண் தவராஜா தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தில் நிலநடுக்கம் அசாதாரணமானது என்றும் , ஈ.டி.எச் சூரிச்சில் நில அதிர்வு சேவையில் கடந்த ஆண்டு 1,400 நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இந்த புள்ளிவிபரங்கள் நீண்ட கால சராசரிக்கு சற்று மேலே உள்ளது என்றும் இதில் 106 நிலஅதிர்வுகள் மக்களால் உணரப்பட்டன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் மிக நீண்ட வருடத்தின் பின்னர் ஏற்பட்ட சராசரியை அளவை விட அதிகரித்த அளவைக் கொண்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இதுவரை தெரியவரவில்லை. மின்னல்24 

1 comment:

Powered by Blogger.