Header Ads



நாட்டில் 2 வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் உள்ளது, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு


சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள கப்பல்; இலங்கையின் எரிபொருள் தேவையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதால் சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள பாரிய கொள்கலன் கப்பல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தாய்வானின் எவர் கிறீன் மெறைன் நிறுவனத்திற்கு சொந்தமான, எவர் கிவன் என்ற உலகின் மிகப்பெரிய எரிபொருள் பரிமாற்றும் கொள்கலன் கப்பலான இரண்டு இலட்சத்து 24 ஆயிரம் தொன் எரிபொருளை கொண்டு சென்றுக்கொண்டிருந்த வேவையில் சுயெஸ் கால்வாயில் திடீரென ஏற்பட்ட மணல் காற்றால் கப்பலானது திசைமாறி தரைதட்டியுள்ளது.

400 மீற்றர் நீளமும் 59 மீற்றர் அகலமும் உடைய குறித்த கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவிலிருந்து நெதர்லாந்து நோக்கி பயணித்துள்ளது. கப்பலில் 20ஆயிரம் கொள்கலன்களில் எரிபொருள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு இந்த எரிபொருள் பகிர்ந்தளிக்கப்படவிருந்த நிலையிலேயே விபத்து நேர்ந்துள்ளது. கப்பலை தரையிலிருந்து கடலுக்கு இழுக்கும் செற்பாட்டை நெதர்லாந்தின் விசேட படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நடவடிக்கைக்கு பல நாடுகளும் உதவிகளை அளித்து வருகின்றன.

சுயெஸ் கால்வாயில் கப்பல் தரைதட்டியுள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையும் உயர்வடைந்துள்ளது. ப்ரெட் சந்தையில் 0.7 சதவீதத்தால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து தினங்களாக இந்தக் கப்பலை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இன்னமும் அந்தப் பணி வெற்றியடையவில்லை.

இதன் காரணமாக சுயெஸ் கால்வாயின் ஊடாக பயணிக்கவிருந்த 200 இற்கும் அதிகமாக கப்பல்கள் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

கப்பலை விரைவாக அகற்ற முடியாது போனால் உலக பொருளாதாரத்திற்கும், தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். கப்பல் தரைதட்டியுள்ளதால் இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் அல்லது எரிபொருள் தட்டுப்பாடு ஏதும் ஏற்படாதென அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.


சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments

Powered by Blogger.