Header Ads



பெண்ணுக்குள் 2 இதயங்கள் உண்டா..??

ஆராய்ச்சி மாணவர்கள் நிறைந்த அவையில் குர்ஆனில் மொழிவளம் சொல்லாட்சி இலக்கிய நயம் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் பேராசிரியர் ஒருவர்.

 உரையில் அவர் குர்ஆனுடைய சொல்வளம் எத்தகையது என்றால் அது பயன்படுத்திருக்கின்ற சொல்லிற்கு பதிலாக வேறு ஒரு சொல்லை பயன்படுத்தினால்  குர்ஆன் கூற வரும் கருத்தே மாறிவிடும் என்ற சொன்னவர்

அதற்கான சில எடுத்துக்காட்டுகளை யும் சுட்டிக்காட்டினார்.

அப்பொழுது ஒரு மாணவர் எழுந்து  பேராசிரியர் அவர்களே! நீங்கள் சொல்லுவது ஒரு வசனத்திற்கு முரணாக இருக்கின்றது குர்ஆன் பயன்படுத்தி உள்ள சொல்லுக்கு  மாற்றாக வேறு சொல்லை  பயன்படுத்தினால் அதனுடைய கருப்பொருள் மாறிவிடும்  எனக் கூறுகிறீர்கள்

 ஆனால் குர்ஆனின் 33வது அத்தியாயம் நான்காவது  வசனத்தில்

#அல்லாஹ் எந்த ஆணினுள்ளும் இரண்டு இதயங்களை அமைக்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது 

   இவ்வசனத்தில்  #ரஜ்ல் ஆண் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது

ஆனால் ஆணுக்கும்  பெண்ணுக்கும்    ஒரு இதயம் தானே   இருக்கிறது அவ்வாறானால்  இந்த வசனத்தில் #ரஜ்ல் என்ற சொல்லுக்குப் பகரமாக  #பஷர்   

மனிதனுக்குள் என்ற சொல்தானே பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும்

அப்பொழுது தானே  அது ஆணையும்  பெண்ணையும் குறிப்பிட்டிருக்கும் 

இந்த ரஜ்லு என்ற சொல்லின் மூலம் ஆணுக்கு மட்டும்தான் இரண்டு இதயம் இல்லை பெண்ணுக்கு இருக்கிறது என்பது போன்ற கருத்து வருகிறதே 

இது உங்களுடைய கூற்றுக்கு முரணாக இல்லையா? என்று கேட்டார்.

 ஒரு நிமிடம் அரங்கம் நிசப்தமானது அனைவருக்கும் அவர் கேட்டதுசரியான கேள்வி தானே இரண்டு பாலாருக்கும் ஒரே இதயம்தானே இருக்கிறது அவ்வாறு இருக்க குர்ஆன் 'ஆண்'என்று ஏன் குறிப்பிட வேண்டும் என்கின்ற ஐயம் அனைவருக்கும் ஏற்பட்டது 

இதற்குப் பேராசிரியர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை அனைவரும்

அவரை உற்று நோக்கியபடி இருந்தனர்.

புன்னகையுடன்  பேராசிரியர்  பேச ஆரம்பித்தார்

#சகோதரரே நீங்கள் கேட்ட கேள்வி சரிதான் ஆனால் "ஆணுக்குள்ளே இரண்டு இதயங்கள் இருப்பது சாத்தியம் இல்லாத ஒன்றுதான் ஆனால் பெண்ணுக்குள்ளே இரண்டு இதயங்கள் இருப்பது சாத்தியமான ஒன்று" என்றார். 

கேள்வி கேட்டவர் வியப்புடன் அவரை பார்க்க தொடர்ந்த  பேராசிரியர் சொன்னார்:

#ஒரு பெண் கருவுற்று அது குழந்தையாக உருவாகின்ற பொழுது அந்த குழந்தைக்கும் ஒரு இதயம் இருக்கும் அல்லவா அவ்வாறாயின் அக்காலகட்டத்தில் பெண்ணுக்குள்ளே இரு இதயங்கள் இருக்கும் இல்லையா?

மனிதன்  என்று போட்டிருந்தால்  கருவுற்ற பெண்ணுக்குள் இரண்டு இதயங்கள் இருக்க சாத்தியம் இருக்கிறதே எனும் கேள்வி எழும்   எனவே ஆணினுள்ளே இரண்டு இதயங்களை அல்லாஹ் அமைக்கவில்லை என்பதுதான்  பொருத்தமான சொல்லாக இருக்கமுடியும் என முடித்தார் பேராசிரியர் 

அரங்கத்தில் கரகோஷம் அடங்க சில நிமிடங்கள் ஆனது

----அரபு இணையதளத்திலிருந்து 

கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி

3 comments:

  1. Mashallah !!! AlHamdulliah !!!!

    ReplyDelete
  2. pothuwaka manitha inatthai parry kuran hadeesil allah kurippidumpothu pothuwaka aan palil than kurippittirikiran. ithu mathiri islatthil illathathai publish panna wendam

    ReplyDelete

Powered by Blogger.