Header Ads



இந்தியாவில் இருந்து வந்த 20,000 கிலோ காய்ந்த மிளகாயில் புற்றுநோயை ஏற்படும் பதார்த்தங்கள்


இந்தியாவிலிருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 20,000 கிலோகிராம் காய்ந்த மிளகாயை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

குறித்த மிளகாய்க்குள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அப்லரொக்ஸின் (Aflatoxin) பதார்த்தம் அடங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி மிளகாயை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருந்தது.

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட குறித்த காய்ந்த மிளகாய் மீதான இரண்டாவது பரிசோதனை நேற்று இடம்பெற்றது.

இதன்போதே அவற்றில் அப்லரொக்ஸின் பதார்த்தம் அடங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. Hiru

1 comment:

  1. ஒரு குடும்பத்தை மாத்திரம் வைத்து மற்ற அனைத்து மக்களையும் கொன்றொழித்துவிடும் ஒரு சனநாயகத் கொள்கை தற்போது பின்பற்றப்படுகின்றதா?

    ReplyDelete

Powered by Blogger.