Header Ads



2 நாட்களில் 20 ஜனாஸாக்கள் அடக்கம் - களத்தில் செயலாற்றும் மரண விசாரணை அதிகாரி MSM நஸீர்


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் பதினொரு (11) ஜனாஸாக்கள் இன்று சனிக்கிழமை ரவு வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் இன்று சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கொரோனாவினால் மரணித்தவர்களின் இருபது (20) ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இன்று சனிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த நான்கு பேர் திகாரி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நாரங்கொடயை சேர்ந்த ஒருவர், கொழும்பைச் சேர்ந்த ஒருவர், மாத்தளை அக்குறனை மற்றும் அம்பத்தென் பகுதியை செர்ந்த தலா ஒரவருமாக பதினொரு ஜனாசாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 09 ஜனாசாக்களும்  , இன்றைய தினத்தில் பதினொரு  ஜனாசாக்களையும் சேர்த்து இருபது ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக களத்தில் செயலாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

1 comment:

  1. Marana visaranai adhihari nazeer awarhalakum udavi othasai seitha anaiwarukkum manamarntha nanri.

    ReplyDelete

Powered by Blogger.