Header Ads



1996 உலகக்கிண்ண வெற்றியின் 25 ஆவது ஆண்டுவிழா - ஜாம்பவான் சனத் வெளியிட்ட அறிக்கை


1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் கைப்பற்றியது கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

17.03.2021 நினைவுகூரப்படும் இலங்கையின் 1996 கிரிக்கெட் உலகக் கிண்ணம் வெற்றியின் 25வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சனத் ஜெயசூரிய வெளியிட்ட அறிக்கையில், இந்த வெற்றி இளம் கிரிக்கெட் வீரர்களிடையே ‘அவர்கள் கனவை அடைய முடியும்!’ என்ற நம்பிக்கை ஏற்படுத்த ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

எங்கள் உலகக் கிண்ணம் வெற்றிக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு! தங்கள் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பது தான் ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும், அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டேன்.

இலங்கை கிரிக்கெட்டின் அப்போதைய தலைவர் Ana Punchihewa மற்றும் அணித்தலைவர் Arujana Ayya ஆகியோர் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர், Arujana Ayya களத்திலும், களத்திற்கு வெளியேயும் எங்களுக்கு ஒரு தந்தையாக திகழ்ந்தார். அவரது தலைமை எங்களுக்கு வழி காட்டியது.

அந்த தொடர் மற்றும் உலகக் கிண்ணம் வெற்றியின் பல சிறந்த நினைவுகளை நான் எனது சக அணி வீரர்களுடன் பகிர்ந்து கொண்டேன். எங்களுக்குள் ஒரு சிறப்பு பிணைப்பு இருந்தது, அணி உணர்வும், எப்போதும் விளையாட்டிற்கு எங்களது சிறப்பான திறனை வெளிப்படுத்த வேண்டும் என்ற தாகமும் இருந்தது என்று ஜெயசூரியா கூறினார்.

எங்கள் பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கும், எங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்க உதவிய இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் எனது சிறப்பு நன்றி.

நான் எனது நாட்டிற்காகவும், அன்பான பொதுமக்களுக்காகவும் விளையாடினேன், 1996 ஆம் ஆண்டில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த உலகக் கிண்ணத்தை நாட்டிற்கு கொண்டு வந்தபோது இது விளையாட்டில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சாதனையாகும் என ஜெயசூர்யா கூறினார்.

ஆதரவளித்த தனது அணி வீரர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தியாவில் நடந்த சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் இலங்கை ஜாம்பவான் அணிக்காக விளையாடுவதால் கொழும்பில் நடக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்க முடியவில்லை என்று ஜெயசூரியா கூறினார்.




No comments

Powered by Blogger.