Header Ads



மஞ்சளை விவசாயம் செய்தால், ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் மானியம் வழங்கப்படுமென அறிவிப்பு


- மொஹொமட் ஆஸிக் -

இந்த வருடம், மஞ்சள் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, 1 கிலோகிராம் விதை மஞ்சளுக்கு, 150 ரூபாய் மானியத்தை, ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் வழங்கவுள்ளதாக, அதன் பணிப்பாளர் நாயகர் கலாநிதி ஏ.பீ.ஹீன்கெத்த தெரிவித்தார்.

கண்டி, கெட்டம்பேயில் அமைந்துள்ள ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தில், நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “2019ஆம் ஆண்டு, மஞ்சள் இறக்குமதியைத் தடை செய்ததன் பின்னர், 2020ஆம் ஆண்டிலிருந்து மஞ்சள் உற்பத்தியில், தன் நிறைவைக் காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2020ஆம் ஆண்டு 1,500 ஹெக்டேயரில், மஞ்சள் உற்பத்தி செய்யப்பட்டன. அதன் மூலம் 25,000 மெட்ரிக் தொன் பச்சை மஞ்சள் கிடைக்கவுள்ளது. அதன் அறுவடை, ஓரிரு மாதங்களில் கிடைக்கும். அதிலிருந்து சுமார் 4,000 மெட்ரிக டன் மஞ்சளை, இவ்வருட விதைக்காகப் பயன்படுத்தி, 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், 60 ஆயிரம் மெட்ரிட் தொன் மஞ்சள் உற்பத்தியை எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு கிடைத்தால், 2022ஆம் ஆண்டு ஆரம்பத்தில், எமது நாடு மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்றும் அவர் கூறினார்.

1 comment:

  1. மஞ்சள் தூள் loda cherththu மஞ்சள் துண்டு kkum பரிசு கொடுக்க laamthaane

    ReplyDelete

Powered by Blogger.