Header Ads



VIP க்களுக்கு கொரோனா தடுப்பூசி, முன்னுரிமையில் வழங்கப்படுகிறதா..? ரோசி விளக்குகிறார்


கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளின் போது எந்த மிகமுக்கிய பிரமுகருக்கும் முன்னுரிமை அளிக்குமாறு நான் பட்டியல் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

நான் விருப்பபட்டியலொன்றை சமர்ப்பித்தேன் என சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் புனையப்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது எனக்கு எதிராக சேற்றைவாரியிறைக்கும் பிரச்சாரம் என குறிப்பிட்டுள்ள மேயர் முன்னுரிமை பட்டியலொன்றை நான் சமர்ப்பித்தேன் என தெரிவிப்பது முற்றிலும் பொய்யான விடயம்எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுசுகாதார பரிசோதகர்களும் வோர்ட் உறுப்பினர்களும் பட்டியலொன்றை உருவாக்கி குறிப்பிட்ட தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் பொதுமக்களை மருத்துவர்களிடம் அனுப்புவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

60வயதிற்கு உட்பட்ட 115,000 பேருக்கு இரண்டு வாரங்களில் தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளோம் என ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் வசிக்கும் 60வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் பகுதி பொதுசுகாதார பரிசோதகர்களிடம் அல்லது மாநாகர சபை உறுப்பினர்களிடம் தங்களை பதிவு செய்யதுகொள்ளவேண்டும் என மேயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 comment:

  1. anty raozi, how can tell you other s vip, you and your workers are living able to pay tax , ? people are VIP?

    ReplyDelete

Powered by Blogger.