Header Ads



SLMC க்குள் நெருக்கடியா..? 4 Mp ளை கட்சி பதவிவிலக கோரிக்கை - சிங்கள ஊடகம் தகவல்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அந்த கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்து விலகுமாறு கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கட்சியின் தலைவரது தீர்மானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்களை கொண்டுள்ளதுடன், அவர்களில் நான்கு பேர் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. அடுத்த கட்ட நாடகம் ஆரம்பம்.
    excellent keep it up.

    ReplyDelete
  2. If true, for once, Rauf Hakeem seems to face a challenge Head-on. Wonder how long it will take for things to unravel.

    ReplyDelete
  3. Why was this delay? Didn’t those 4 MPs voted in favour of 20th amendment months ago?

    ReplyDelete

Powered by Blogger.