Header Ads



PCR பரிசோதனை மாதிரிகள் பெரும்பாலானவை, ஆய்வகங்களில் தேங்கிக்கிடப்பதாக குற்றச்சாட்டு..!


பி.சி.ஆர் பரிசோதனைக்காக வழங்கப்படும் மாதிரிகளில், பெருமளவானவை ஆய்வகங்களில் தேங்கிக்கிடப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரான வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று வரையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, பல ஆய்வகங்களில் கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் கூட அவ்வாறே உள்ளதாக தெரியவருகின்றது.

எனவே, ஆய்வு முறைமை மற்றும் தனிமைப்படுத்தல் கொள்கை என்பன தொடர்பில் கட்டாயமாக மீளாய்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள ஆய்வகங்களில் போதுமான இரசாயணங்களும், பணிக்குழாமினரும் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய பிசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 20,000 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை முதல் கேகாலை பொது வைத்தியசாலயில் நாளாந்தம் 300 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது நாடுமுழுவதும் நாளாந்தம் 600 முதல் 800 வரையிலான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், ஒவ்வொரு நோயாளருக்கும், ஒரு கட்டிலுடன்கூடிய சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.