February 09, 2021

விளையாட்டை ஆரம்பித்துள்ள விமல் வீரவன்ச - நளின் Mp


இன்று(09) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்துக்கள்.

இந்த அரசாங்கத்திடம் பொய்யும் விளையாட்டும் தான் இருக்கிறது.சிறு பராயத்தில் இரண்டு பிரிவுகளாக விளையாடி இறுதியில் ஒன்று படுவது போல இந்த அரசாங்கத்தின் உள்ளேயேயும் இரண்டு பிரிவாக நின்று விளையாடுகின்றனர.இந்த விளையாட்டை 20 ஆவது திருத்தத்தின் போதும்,கிழக்கு முனைய விவகாரத்திலும் பாரத்தோம்.இரண்டு பக்க பிரிவு விளையாட்டை தற்போதைய சூழலுக்கு ஏற்ப சிறந்த வீர்ராக  விமல் வீரமன்ச ஆரம்பித்துள்ளார். இதும் சோடிகப்பட்ட விளையாட்டாகும். நாட்டில் உன்மையான பிரச்சிணைகளை மறைப்பதற்காகவும் திசை திருப்புவதற்காகவும் தான் இதைச் செய்கின்றனர்.

ஏலவே பல வர்தமானிகள் வெளியிடப்பட்டும் நடைமுறைப்படுத்தாத விலை சூத்திரங்களை இன்று பந்துல குணவர்தனவின் விலை குறைப்பு சூத்திரம் இதை சாத்தியப்படைத்துமா? வெறும் வெற்று சூத்திரங்கள். மக்களை மீளவும் விலை ஏற்றத்தின் பால் கொண்டு செல்லும் நடவடிக்கையின் ஆரம்பமாகும்.

கொவிட் புள்ளிவிபரங்களை அரசாங்க தரப்பு மறைக்கிறது.நாளாந்தம் வெளியிடும் புள்ளிவிபரங்கள் பொய்யானது. நாளாந்தம் குருநானகல் வைத்தியசாலையில் ஒருவர் ஒருவர் வீதம் எரிக்கப்படுவதாக அறிகிறோம். மஹியாவயிலும் இவ்வாறு தான் நிலை. கொவிட் சமூகத்தில் சகல மட்டங்களிலும் பரவியுள்ளன.அரசாங்கம் பொருத்படுத்தாமல் இருக்கிறது.

அரசாங்கத்தின் உன்மை பிரச்சிணை பொருளாதாரமாகும். இதை மறைக்க சோடிக்கப்பட்ட பொய்களை கூறுகின்றனர்.

சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக ஆதி வாசி தலைவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குருநாகலில் பொரல் அகழ்வுக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.வரலாற்று சிறப்பு மிக்க இடம் அது.இடங்களின் பொறுமதிகளை கஜமிதுரு குழுமம் பெறுமதியற்றதாக ஆக்கி வருகின்றனர்.

ஶ்ரீ மாவோ பண்டாரநாயக்கவின் பிரஜா உரிமை நீக்கத்திற்கு விஷேட  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.அதன் பின்னர் இலங்கையில் நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு தான் கோடாபய நியமித்துள்ள அரசியல் பழிவாங்கள் விசாரணை ஆணைக்குழுவாகும்.பல வழக்குகளை கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் வாதிகள் அல்லமால் அரச சட்டமா அதிபராலும் திணைக்களத்தாளும் தொடுக்கப்பட்டவையாகும். ஆனால

இன்று அதன் பரிந்துரைகள பழிவாங்கள் நடவடிக்கையாக அமைந்து காணப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதலின் உன்மையான நிர்மானிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு இதன்பால் பாரிய பெறுப்பு உள்ளது.ஆட்சி மாற்றத்தின் பிரதான காரணிகளில் முன்னிலை வகிப்பது ஈஸ்டர் தாக்குதலாகும்.நான் சாட்சியத்திற்கு அழைக்ப்பட்ட சந்தர்ப்பத்தில் முக்கிய சாட்சிகள் அடங்கிய இரு இருவட்டுக்களை சமர்பிக்க நான் அனுமதி கேட்டும் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சாட்சியங்களை மறைத்து அரசியல் நோக்கங்களை தான் இதில் செயற்ப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

ஏன் தோடாமல் இருக்கின்றனர்.காதினலும் இதைத்தான் அடிக்கடி கூறுகிறார்.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் தொடர்பு இருப்பதால் தான் தோடாமல் இருக்கின்றனர்.

ஐநாவின் மனித உரிமை பிரச்சிணை க்கு அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என்ற ஊடகவியலாளரின் கேளவிக்கு பதிலளிக்கும் விதமாக;

ஆதரவளிப்பதா இல்லையா பங்கேறபை கோருவதா இல்லையா எனபதை அரசாங்கம் தான் ஆரம்பிக்க வேண்டும்.கொவிட் நிலையிலும் இதைத் தான் செய்தார்கள்.இறுதியில் சர்வ கட்சி கூட்டத்தை ஒரு நாள் தான் நடத்தினார்கள்.இது அரசாங்கம் சாரபுள்ள தீர்மானமாகும்.நாட்டிற்கு போலியான குற்றச் சாட்டின் அடுப்படையில் நடவடிக்கை எடுக்க சர்வதேச தரப்பு முயற்சித்தால் நாட்டிற்காக முன்னிற்போம் என்று தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a comment