Header Ads



ஜனாஸா அடக்க அனுமதியில், பிரதமரால் பாராளுமன்றத்தில் பொய் கூற முடியுமா..? மரிக்கார் Mp கேள்வி


இன்று (12) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்த கருத்துக்கள்.

நேற்று ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் சிறு பிள்ளை போன்று பிரதமரின் வாக்குறுதி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.கம்பஹாவிற்கு சென்று வேறு வேலை ஏதேனும் இருப்பின் அதை செய்யுமாறு நான் அவருக்கு கூறுகிறேன்.

இலங்கையின் பிரதமரின் கருத்தாகத் தான் அவருடைய கருத்தை நோக்க வேண்டும். பொஹோட்டுவ்வின் கருத்தாக நோக்க வில்லை. பிரதமரால் பாராளுமன்றத்தில் பொய் கூற முடியுமா என்று நான் வினவுகிறேன்.அவர் அரசியல் அனுபவம் உள்ளவர். முதிர்சி மிக்க அரசியல்வாதி.என்றாலும் அவரின் அரசியல் கொள்கைகளுக்கு இனங்குபவனல்ல.ஜெனிவாவில் என்ன நடக்கப் போகிறது என்ற விடயத்தை அறிந்து தான் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரி-ரணில் அதிகார போட்டி போல் இன்று ஜனாதிபதி-பிரதமர் அதிகார போட்டி ஏற்ப்பட்டுள்ளது.

நீரினால் வைரஸ் 0.001 வீதம் கூட பரவும் என்று விஞ்ஞான ரீதியாக நிறூபிக்ப்பட்டால் நாங்கள் ஒரு போதும் இதற்கான அனுமதியை கோற மாட்டோம்.மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்.

உலக சுகாதார ஸ்தாபன விதிமுறைகளுக்கு ஏற்ப அடிப்டை மனித உரிமையை வழங்குங்கள்.

பிரதமரிடம் கொவிட் மரணங்களை புதைப்பப்பதற்கான உரிமையை வழங்குமாறு வினவினேன்.சபாநாயகர் குறுக்கிட்டு சந்தர்ப்பம் அளிக்காமல் போன போது கூட பிரதமர் இடையிட்டு எனது பெயர் கூறி எனது வினாவிற்கான பதிலாக புதைப்பதற்கான அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.சாதாரன மரணத்திற்கல்ல. சாதாரன மரனத்தை புதைப்பதற்கு அவரிடம் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை.

இதை ஒர் மதப் பிரச்சிணையாக பார்க்காமல் தேசியப் பிரச்சிணையாக பார்த்து பிரதமர் தெரிவித்த பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கையாக வர்த்தமானியை வெளியிட்டி இதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுங்கள்.

விஞ்ஞான ரீதியாக மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு வேண்டிக் கொண்டார்.

No comments

Powered by Blogger.