February 10, 2021

ஈஸ்டர் தாக்குதலினால் ஸஹ்ரான் குழுவிற்கோ, முஸ்லிம் சமூகத்திற்கோ எந்த நலவும் ஏற்படவில்லை - ஹெஷா Mp


இன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதானகே தெரிவித்த கருத்துக்கள்.

20 ஆவது திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு ஆதரவு கொடுத்தும் மக்கள் தொடர்பாக என்ன நலன் திட்டங்களை முன்னெடுத்தாரகள்? என்று கேள்வி எழுப்பிய அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

மரண தண்டனை குற்றம் நீதி மன்றில் ஒப்புவிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததை அவருக்கு வாக்களித்த மக்களும் நிராகரித்தாரகள். அந்த செயலை சரி காணவில்லை.விடுதலை செய்ப்பட்ட அந்த நாளின் பிரதான செய்தியை மறக்கடிக்க மாடறுப்பு  தடையை சேடிக்கப்பட்ட பிரதான கருத்தாக கட்டமைத்து சமூகமயப்படுத்தி மக்களின் கவனத்தை உப விடயங்களின் பக்கம் திருப்பினார்கள்.இது எப்படி ஒர் நாடகமாக இருந்ததோ அதை ஒத்த ஒர் நாடகத்தை விமல் வீரவங்ச மற்றும் 

சாகர காரியவசம் என்ற பிரதான இரு நடிகர்களைக் கொண்டு அரங்கேற்றியுள்ளது இந்த அரசாங்கம்.இன்று சகல விவகாரங்களிலும் பாரிய நாடகம் ஆடுகின்றனர். சர்வதேச அரங்கில் தேற்பார்கள் என்று தெரிந்து கொண்டே நாட்டில் பெருன்பான்மை மக்களை குஷிப்படுத்த முற்படுகின்றனர்.

சதோசவுக்கு பெறுப்பான அமைச்சரவை அமைச்சருக்கும் தெரியாமல் பொருட்களின் விலைகள் நிர்னயம் செய்யப்படுகிறது.இவ்வாறு செய்வது யார்? அமைச்சரையும் தான்டி அதிகாரம் கொண்ட நபர்கள் யார்? என்று கேள்வி எழுப்பினார்.

கொரோனா நேற்று 800 யும் தான்டியுள்ளது.ஒர் நாளைக்கு 800 க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்ட வன்னமுள்ளனர்.

தனிமைப்படுத்தல் இன்று 14 நாட்களும் 24 நாட்களும் என்று கொள்கை ஒன்று இல்லாமல் மேற்கொள்ளப்படுகிறது.

கிழக்கு முனையம் தொட்ரபாக இந்தியாவுடன் வேறு ஓரு நிலைக்கு இட்டுச் செல்ல முய்படுகின்றனர். சீனாவுடன் நல்லுறவு பேனும் நாடுகள் இலங்கையுடன் தொடர்புகளை பலப்படுத்த முற்படுகின்றன.இம்ரான் காணின் வருகையும் இந்தப் பின்னனியில் தான் அமைகிறது.இந்தியாவைப் பகைத்துக் கொண்டு எங்களால் முன் செல்ல முடியாது.

ஜனாதிபதியும் கிராமம் கிராமமாக சென்று நாடகம் ஆடுகிறார். கம சமக பிரிசந்தர நிகழ்ச்சியில் பங்கேற்கிரார்.அன்மையில் தெரனியகலயில் இடம் பெற்ற நிகழ்வில் ஒர் யுவதியின் ஆங்கில மொழி திறமையை பரீட்சிக்கிறார். திட்டமிட்ட நாடகம் இது.எழுதி வைக்கப்பட்டு பேசுகின்றார்.இவ்வாறு நாட்டில் பிரச்சிணைகளை தீர்க்க முடியாது.

சமூர்த்தி வங்கியில் மக்களின் வைப்புகளை அரசாங்கம் தமது பாவனைக்காக எடுத்துள்ளது. வறிய மக்களின் சேமிப்பையும் கூட இந்த அரசாங்கம் சூறையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஶ்ரீ மாவே பண்டாரநாயக்கவிற்கு ஏற்ப்பட்ட நிலை தான் இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும். மியன்மார் நிலைக்கு எங்களால் செல்ல முடியும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.அது ஒரு போதும் நடக்காது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர். இதெல்லாம் பொய்யான விசாரனைகளாகும். நீருக்குள் இருக்கும் பந்து எவ்வாறு கீழ் சென்று மேல் வருமோ அவ்வாறே இந்த ஈஸ்டர் தாக்குதலின் பிரதான நபர்களும் கிட்டிய காலத்தில் வெளிப்படுவர்கள்.

இன்று சகல விடயங்களையும் விளையாட்டாக எடுத்து மக்களை ஏமாற்றி தமது அதிகார இருப்பை தக்க வைக்கின்றனர்.

சிங்கள வீரராகி இங்கிலிசில் தோற்றுப் போவார்கள்.சர்வதேச பிரச்சிணைகளுக்கு உரிய வித்த்தில் முகம் கொடுங்கள்.நீங்களாகவே சர்வதேசம் பார்க்கும் விதமாக நடத்தைகளையும் பிரச்சிணைகளையும் ஏற்படுத்தாதீர்கள் என்று அரசாங்கத்தை வேண்டிக் கொண்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக; இதன் பிரதான நபர் வெளிப்படுத்தப்பட வேண்டும்.தாக்குதலால் கூடிய பிரயோசனம் பெற்றவர்கள் இன்று உள்ளனர்.ஸஹ்ரான் குழுவிற்கோ,முஸ்லிம் சமூகத்திற்கோ இதனால் எந்த நலவும் ஏற்படவில்லை.இவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக சபாநாயகர் தெரிவித்த  பாரதூரமான கருத்து தொடர்பாக விசாரனை மேற்கொள்ள வேண்டும்.முன்னைய விசாரனை ஆணைக்குழுவின் அங்கத்தவராக இருந்த நளிந்த ஜயதிஸ்ஸ அவர் தெரிவித்த கருத்து தெடர்பாகவும் விசாரனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து உன்மைகளை மக்களுக்குக் கூற வேண்டும் என்று தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

சபாநாயகர் சொன்ன பாரதூரமான கருத்தை செய்தியாகப் பதிவிடுங்கள்

Post a comment