Header Ads



இம்ரானின் உரை ரத்துச் செய்யப்பட்டமை ஒருதலைப்பட்சமானது - இம்தியாஸ் Mp கவலை தெரிவிப்பு


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆற்றவிருந்த உரை ரத்துச் செய்யபட்டமையானது, ஒருதலைப்பட்சமானது என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மரிக்கார் தெரிவித்தார்.

தமக்கு கிடைத்த நம்பத்தகுந்த ராஜதந்திர வட்டாரத் தகவல்களின்படி, பாகிஸ்தானுடன் கலந்துரையாடமலே  இலங்கைப் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் ஆற்றவிருந்த உரையை ரத்துச் செய்துள்ளார்கள். 

இது ஒரு மோசமான, இலங்கைக்கு ராஜதந்திர ரீதியில் பின்னடைவை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகும். இலங்கையை நேசிக்கும், தேசிய ஐக்கியத்தை நேசிக்கும் ஒரு அரசியல்வாதியாக, இலங்கையனாக இதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

தெற்காசியாவின் பலம் பொருந்திய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அதன் தற்போதைய தலைவர் இம்ரான்கான் ஜனநாயகத்தை நேசிப்பவர். அவரது உரையை இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள பல அரசியல்வாதிகள் கேட்பதற்கு  மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததை நான் அறிவேன். எனினும் இந்த ஒருதலைப்பட்சமான தீர்மானத்தினால் அவர்களின் எதிர்பார்ப்பு தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது.

அவசியப்பட்ட  மிகமுக்கிய நேரங்களில் பாகிஸ்தான் இலங்கைக்கு பாரியளவு உதவிகளை தாராளமாக அள்ளி வழங்கியுள்ளது. தற்போதும் தாராள மனதுடன் தொடர் உதவிகளை செய்து வருகிறது. 

இந்நிலையில் இம்ரான்கானின் இலங்கை பாராளுமன்ற உரை ரத்துச் செய்யப்பட்டமை தவறானது. ராஜதந்திர ரீதியில் பிற்போக்குத்தனமானது எனவும் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. This government is creating a bad image of to our country around the world. The rulers of our country will keep changing but the citizens will be same and going to face the consequences from this bad management.

    Do not think that we are wise and can tactfully benefit from the world in cunning way. The countries around us are far more intelligent in politics. So let us benefit from them while giving due respect with open heart. This will be good for our future.

    ReplyDelete
  2. Absolutely correct. What an Insult to the Prime Minister of a Friendly country which has helped Sri Lanka immensely during the War against Terror. So much so, even the Pakistani Pilots were actively involved in bombing operations against the LTTE.

    The Prime Minister of India, Modi, was given the privilege of addressing the Parliament when he visited Sri Lanka and India did NOT go so far as Pakistan in helping in the War. If at all, the Indian response was more in helping the terrorists than in helping Sri Lanka.

    How Ungrateful this Sri Lankan Govt. is to Pakistan. And still, this Govt. expects more favours from Imran Khan and expects him to canvass the Support of Muslim countries during the forthcoming UNHCR Conference.

    ReplyDelete

Powered by Blogger.