Header Ads



புதிய தேசிய அரசியல் கட்சியுடன் வடகிழக்கு, முஸ்லிம்களை இணைந்து கொள்ள இம்தியஸ் அழைப்பு


கிழக்கு மாகாண விஜயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்,
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தொரிவித்த கருத்துக்கள்.

தேசிய கட்சிகள் வர்க்கவாத கோஷங்கள் பிரிவினைவாத கோஷங்களின் பக்கம் சென்றதன் காரணமாக வட கிழக்கு முஸ்லிம் சமூகம் தேசிய அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்துள்ளதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

தேசிய கட்சிகளின் இந்த துரதிஷ்டவசமான பார்வைகளின் வெளிப்பாடுகளாக முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் உருவாகின.

இதனால் சிறுபான்மை சமூகங்ளுக்கு மத்தியிலும் பொருன்பான்மை சமூகதற்குள்ளும் குறுகிய நோக்கங்களுக்காக பிரிவினைவாத கருத்துக்கள் பரவி இன்று அதன் விளைவுகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஒரு தலைபட்சமான அரசியல் சித்தார்ந்தந்தை அடுத்த தலைமுறையினரின் உனர் திறன்களுக்கும் சூட்சுமமாக காய் நகர்துவதற்கு இடமளிப்பதை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பதற்கு இந் நாட்டுப் பிரஜைகளால் முடியாது.

எனவே நிலைபோறான அரசியல் இருப்பை ஸ்திரப்படுத்தாத பிரிவினைவாதங்களைக் கொண்ட அரசியலுக்குப் பகரமாக நாம் இலங்கையர்கள் என்ற ஒன்றித்த தேசிய அரசியலுக்குப் பொருத்தமான தூய எண்ணம் கொண்ட,படித்த,இளம் முற்போக்கு அரசியல் தலைவர்களை உருவாக்குவதை பிரதான இலக்காகக் கொண்டே கிழக்கு மாகாண விஜயம் இடம் பெற்றது.

பிரிவினைவாதத்தை அரசியல் மூலதனமாகக் கொண்டு பின்நோக்கி சென்று கொண்டிருக்கும் நம் நாட்டை சரியான பாதையில் பயணிப்பதற்கான திசைமுகப்படுத்தலை வடிவமைக்க முற்போக்கு தேசிய வாதத்தை(Positive Nationalism) இலக்காக் கொண்ட புதிய தேசிய அரசியல் கட்சியோடு,பரந்து பட்ட அரசியல் இயக்கத்தோடு இணைந்து கொள்ளுமாறு கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மிக கௌரவமாக அழைப்பு விடுக்கிறோம்.

கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி,கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் இந்த ஆரம்ப கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.பொரும் திரளான மக்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.