Header Ads



ஜனாஸா அடக்க விவகாரம் - பிரதமரின் கருத்து இழிவுபடுத்தப்பட்டு, சாதாரண Mp யின் கருத்து பலமிக்கதாகியுள்ளதா..?


இன்று(12) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்ர மத்தும பண்டார தெரிவித்த கருத்துக்கள்

நுகர்வேறுக்கு அத்தியவசியப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரித்துள்ளது.இதற்கு முன்னரும் எண்ணிடங்காத வர்தமானிகளை வெளியிட்டுள்ளனர்.வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட விலைக்கு பெருட்களைக் கொள்வனவு செய்வதற்கு சந்தையில் பொருட்கள் இல்லை.விலைகள் அதிகம்.இலங்கையின் அரசியல் வரலாற்றில் வர்த்தமானிக்குள்ள மதிப்பையும்,பெறுமதியையும் தாழ்வுக்குட்படுத்திய அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது.இன்று மக்களும்,உரிய தரப்புகளும் வர்ர்த்தமானியை கவனத்தில் கொள்வதில்லை.

இன்று தனது நண்பர்களின் பண பலத்தை ஸ்திரப்படுத்துவதை இலக்காக் கொண்டு குறிப்பிட்ட பொருட்களை கூடிய மடங்கில் இறக்குமதி செய்கின்றனர்.25000 டொண் சீனியை இறக்குமதி செய்துள்ளனர்.தேவையையும் விட இரண்டு மடங்கு அதிகமாக இறக்குமதி செய்துள்ளனர்.சீனி இறக்குமதி வரியை 50 ரூபாவால் குறைத்து நண்பர்களின் நலனுக்காகவே செயற்படுகின்னர்.இன்றும் கூட இந்த வரிக்குறைப்பால் ஏற்பட்ட பயனை மக்களால் அடைந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.இதனால் அரசாங்கத்திற்கு 12.5 பில்லியன் வருவாய் இலாபம் இல்லாமல் போனது.இதன் இலாபங்கள் அரசாங்கத்திற்கும்   கிடைக்கவில்லை.மக்களுக்கும் கிடைக்கவில்லை.

நாட்டின் சகல மக்களும் கொவிட் தடுப்பூசி கொள்வணவிற்காக வெறும் 10 பில்லியன் போதுமானது.சீனியை இந்தியா அல்லது பாகிஸ்தானிலிருந்து தான் இறக்குமதி செய்கிறோம். கூடினால் கிலோ ஒன்றிற்கு அதி உட்ச பட்சமாக 75 ரூபா அல்லது 80 ரூபா செலவாகும்.ஆனால் இன்று சந்தையில் 120 க்கும் அதிக தொகையில் விற்கின்றனர்.பத்திரிகைகளில் விலை குறைப்பு விளம்பரச் செலவை வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவது சிறந்தது. பிரயோசனமற்ற விளம்பரம்.விளம்பரத்தில் அரசியின் விலை நிர்னயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இது நாட்டின் பொரும்போக அறுவடையின் ஆரம்ப காலம்.வழமையாக இக்காலத்தில் அரசியின் விலை குறையும்.தெரிந்து கொண்டே வர்தமானி மற்றும் விளம்பரங்கள் மூலம் அறிவிக்க வேண்டிய தேவையில்லை.சீனியின் வரிச் சலுகை மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க இருந்த வருமானத்தைப் பெற்றிருந்தால் அந்த நிதியை கொவிட் தடுப்பூசிக்காக பயன்படுத்தியிருக்கலாமல்லவா.

இன்று தடுப்பூசிக்காக பிற நாடுகளிடம் கை ஏந்தாமல் செந்த நிதியில் தடுப்பூசிகளைப் பெற்று மக்கள் நலன்களை பாதுகாத்திருக்கலாம்.

நல்லாட்சி நான்காண்டு காலத்தில் பொருட்களின் விலையை குறைத்து தொடர்ந்தும் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தோம்.இந்த அரசாங்கத்திற்கு விலை கட்டுப்பாட்டை தொடர்ந்தும் போன முடியாதவர்களாக இருக்கின்றனர்.

உலர் மிளகாய் இறக்குமதியில் நல்லாட்சி அரசாங்கம் பாரிய ஊழலில் ஈடுபட்டதாக கூறினர்.இன்று என்ன நடக்கிறது? இன்று உலர் மிளகாய் ஒரு கிலோ 525 ரூபா.இன்று உலர் மிளகாய் இறக்குமதியை தமது நண்பர்களுக்கு வழங்கி அதிகம் உழைக்கின்றனர்.

இன்று டைல் மற்றும் செரமிக் தொழித் துறைக்கு இறக்குமதி சார்ந்த வரையறைகளையிட்டு வர்த்தமானி வெளியிட்டுள்ளனர்.இது அத்துறை சார்ந்த வியாபாரிகளுக்கு பாரிய அசௌகரியமாக மாறியுள்ளது.

பாராளுமன்றத்தில் நோற்று முன் தினம் கொவிட் மரண புதைப்பதுக்குரிய அனுமதியை வழங்குவதாக பிரதமர் அறிவித்திருந்தார். நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சர் வேறு விதமாக கூறினார்.மலர்

 மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பில் பிரிதொரு உறுப்பினர் வேறு விதமாக பிரதமரின் கருத்தை குறிப்பிட்டார்.அது சாதாரண மரணங்களுக்குரிய அனுமதி என்பதைத் தான் பிரதமர் கூறியதாக குறிப்பிட்டார். பிரதமரின் கருத்தை விட சாதாரண ஒரு உறுப்பினரின் கருத்து பலமிக்கதா? பிரதமரின் கருத்தை இழிவுபடுத்தும் விதமாக செயற்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.