Header Ads



உடல்களை புதைக்கலாம் என்ற பிரதமரின் அறிவிப்பை நகைப்பாக நோக்காது, சட்ட அங்கீகாரத்தை வழங்குங்கள் - மரிக்கார் Mp


இன்று (11) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்த கருத்துக்கள்.

பிரஜைகளின் அடிப்படை உரிமைகள்,ஜனநாயகம் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பாதுகாப்பது ஓர் அரசாங்கத்தின் பெறுப்பாகும்.இதற்கு இடம் கொடுப்பது முக்கியமான விடயமாகும்.உலக சுகாதார ஸ்தாபன விதிமுறைகளுக்கு மாறாக இலங்கை அரசாங்கம் நீண்ட நாட்களாக புதைப்பதற்குரிய அனுமதியை மறுத்து வந்தது.இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாங்கள் கூட்டாக இதற்காகப் போராடினோம்.முதுகெலும்பு உள்ளவர்கள் போன்று தொடராக இந்த விஞ்ஞான ரீதியான முடிவிற்காக குரல் கொடுத்தோம்.இது பெரிய விடயம் அல்ல.தற்போதும் உலகம் பின்பற்றும் வழிமுறைக்கு இந்த அரசாங்கம் அனுமதியளிப்பது தான் இதிலுள்ள விடயம்.

வைத்தியர் சுதர்ஷனி பெர்னான்டோப் பிள்ளை தான் ஒர் வைத்தியராக இனிமோலும் பெய் கூற முடியாத நிலையில் ரொஹன பண்டார வினவிய கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக நேற்று முன் தினம் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு நான் நேற்று பிரதமரிடம் கொவிட் மரணங்களை புதைப்பப்பதற்கான உரிமையை வழங்குமாறு வினவினேன்.சபாநாயகர் குறுக்கிட்டு சந்தர்ப்பம் அளிக்காமல் போன போது கூட பிரதமர் இடையிட்டு எனது பெயர் கூறி எனது வினாவிற்கான பதிலாக புதைப்பதற்கான அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.

இன்று காலை நான் பாராளுமன்ற ஹென்சார்ட் பிரிவைத் தெடர்பு கொண்டு திருத்தத்திற்குட்படுத்தாத விதமாக நேற்றைய விடயத்தை பதிவு செய்யுமாறு வேண்டிக் கொண்டேன்.ஹென்சார்ட் பதிவுகளை யாராலும் மாற்ற முடியாது.எனவே இதை ஒர் மதப் பிரச்சிணையாக பார்க்காமல் தேசியப் பிரச்சிணையாக பார்த்து பிரதமர் தெரிவித்த பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கையாக வர்த்தமானியை வெளியிட்டி இதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுங்கள்.

அரசாங்கத்தின் பெறுப்பற்ற ஏகாதிபத்திய நடவடிக்கைகள் காரணமாக இந் நாடு ஜெனீவாவில் பாரிய சவால்களை முகம் கொடுக்கும். இதை நன்றாக புரிந்து கொண்ட அரசியல் அனுபவம் கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு விளங்கியதன் காரணமாக மத்திய நாடுகளின் ஆதரவைப் பெறுவதை இலக்காகக் கொண்டு தான் இந்த அனுமதியை தற்போது வழங்கியுள்ளார். பிரதமரின் அறிவித்தலை இன்று உலகம் பாரட்டுகிறது.அமெரிக்கத் தூதுவர்,பாகிஸ்தான் தூதுவர் உட்பட பலர் டுவிட்டர் பதிவுகள் மூலம் பாராட்டியுள்ளனர்.எனவே துரிதமாக வர்தமானி மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன் செல்ல வேண்டும்.சட்ட அங்கீகாரத்தை இதற்கு வழங்குங்கள்.இன்னும் இன்னும் மாயைகளை நம்பி அதன் பக்கம் செல்லாமல் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதித்த வழிகாட்டல்கள் ஆலோசனைகள் மூலம் விஞ்ஞானபூர்வமாக செயற்ப்படுங்கள் என்று வேண்டினார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை வெறும் நகைப்பாக நோக்காமல் பெறுப்பாக செயற்ப்படுங்கள். ஆளும் தரப்பு பின் வரிசை உறுப்பினர்கள் பிரதமரின் முதிர்ச்சியான முடிவுகளை விஞ்ஞான ரீதியாக புரிந்து கொண்டு செயற்ப்படுங்கள். இது இம்ரான் காணின் வருகையை இலக்காகக் கொண்டு தற்காலிக ஏற்பாடுகளாக இருக்கக் கூடாது.நாட்டுப் பிரச்சிணையாக இதை சகலரும் அனுக வேண்டும்.புதைப்பது சகல சமூகங்களிலும் உள்ள விடயமாகும்.முஸ்லிம்,

கிறிஸ்தவ மற்றும் சிங்கள சமூகங்களில் இது பின்பற்றப்படுகிறது.

ஜெனிவா விவகாரங்களை கையாள்வதற்கு,இதனை சாதகமாகப் பயன்படுத்துவதாக என்னிக் கொண்டு தற்காலிக முயற்சியாக இதை கையாள வேண்டாம்.

நாடு என்ற அடிப்படையில் நாங்கள் முன் நிற்ப்போம்.அரசியல் இரண்டாம் பட்சம் தான்.எனவே அரசாங்கம் விஞ்ஞான ரீதியாக மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு வேண்டிக் கொண்டார்.

1 comment:

  1. The Architects behind the Cremation Policy seem to be working Overtime to sideline the Prime Minister. Seems they are trying All the Tricks to continue the Cremation.

    The Muslim Community leaders must be very Alert and take suitable counter action to Counter All Attempts to thwart the PM's Promise. Even making Imran Khan, who welcomed the PM's Promise, look a Fool seems to be of little concern to them.

    ReplyDelete

Powered by Blogger.