Header Ads



இலங்கையை இழிவுபடுத்தும் சில, குழுக்களின் முயற்சிகளுக்கு ஏமாற வேண்டாம் - அமெரிக்காவிடம் கோரிக்கை


இலங்கையையும் அதன் தலைமையையும் இழிவுபடுத்தும் வகையிலான சில குழுக்களின் முயற்சிகளில் ஏமாற வேண்டாமென அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க அமெரிக்க தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தவறான எண்ணங்களில் சிக்கி கொள்ள வேண்டாம் எனவும், உலகளாவிய தொற்று நோயை மிகக்குறுகிய காலத்தில் எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கை அரசாங்கத்தின் சாதகமான அம்சங்களைக் கருத்திற்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதுதரகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் ஆசியாவிற்கான பதில் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட்-19 பரவல் காரணமாக அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள், இணையம் ஊடாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. Mulu pooooosanikkaaai kevalam sottil maraikka paakreenga...Ayyo ayyo...

    ReplyDelete
  2. சில குழுக்களின் பின்னால் போகுமளவுக்கு கொள்கையற்ற நாடா அமெரிக்கா. முதல் இருந்தவர் என்றால் ஓரளவு பொருந்தும்.

    ReplyDelete
  3. நாமளும் எங்க பங்குக்கு அமெரிகா ஏகாதிபத்தியம் சியோனிச ஆதரவு பாலஸ்தீன எதிர்ப்பாளி எண்டு ஒப்பாரி வச்சமெண்டா ஸ்ரீலங்கா மிச்சம் சந்தோசப்படும்!

    ReplyDelete

Powered by Blogger.