Header Ads



இம்ரான் கானுக்கு ஜனாதிபதி, விருந்துபசாரம் வழங்காதது ஏன்..? UNP கேள்வி


- T M -

கடந்தகாலங்களில் பின்பற்றிவந்த பாராம்பரியங்களைப் பின்பற்றி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜனாதிபதி விருந்துபசாரம் அளிக்காமையானது ஏன் எனக் கேள்வியெழுப்பிய ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, வெளிநாட்டு அச்சுறுத்தல் காரணமாகவா பாராம்பரியம் மீறப்பட்டது என வினவினார்.

கொள்ளுப்பிட்டியில் நேற்று (25) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப், இலங்கை வந்தபோது, அப்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் தனித் தனியே அவருக்கு விருந்துபசாரம் வழங்கினர் .

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தின் பர்வேஷ் முஷாரப் இலங்கை வந்திருந்தபோதும், அவ்வாறே ஜனாதிபதி தனியாகவும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தனியாகவும்  விருந்துபசாரம் வழங்கினர் என்றார். 

நாட்டுக்கு வருகைதரும் அரச தலைவர்களுக்கு, இவ்வாறு விருந்தளிப்பது பாராம்பரிய நிகழ்வொன்றாகும் எனக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் பிரதமருக்கு, பிரதமர் மஹிந்த மாத்திரமே விருந்தளித்துள்ளார் என்றார்.

மேற்படி விருந்துபசாரத்தில் 150 பேர் மாத்திரமே பங்கேற்றுள்ளனர். 200 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு இம்ரான் கானைச் சந்திக்க வாய்ப்பளிக்காமை பிரச்சினைக்குரிய விடயம் எனவும் வஜித அபேவர்தன தெரிவித்தார்.      

3 comments:

  1. பாகிஸ்தான் உடனான இலங்கை உறவை சிதைத்து முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகளை ஆசியாவின் அசிங்கம் இந்தியாவோடு சேர்ந்து ஆரம்பித்தது இந்த நயவஞ்சக unp தான். அதன் தொடர்ச்சியை தான் இந்த அரசாங்கமும் கடைபிடிக்கின்றது

    ReplyDelete
  2. Is this the issue???? U people this is why lost all

    ReplyDelete

Powered by Blogger.