Header Ads



இம்ரான் கானுடைய பாராளுமன்ற உரையை, கேட்க மிக ஆர்வமாக இருந்தோம், ரத்துச் செய்து விட்டார்கள்


 இன்று வெள்ளிக்கிழமை (19)இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறிய கருத்துக்கள்,

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்களின் நடவடிக்கை பாரிய அளவில் மேசடிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக மிக அவதானமாக இருக்கிறோம். இது குறித்த பல காரணங்களை சட்டமா அதிபர் திணைக்களம் பல வெளிப்படுத்தியிள்ளது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும்.யாரேனும் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்தால் அவர் நீதிமன்றம் மூலம் நிறுபராதியாகுவது எங்களுக்குப் பிரச்சிணை இல்லை.ஆனால் இன்று அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கில் நிறுராதிகளையும் விசாரணைகளை முன்னெடுத்த அரச அதிகாரிகளையும் குற்றவாளியாக்கியுள்ளனர்

உதய கம்பன்பிலவின் வழக்கிலிருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.யோஷித்த ராஜபக்‌ஷ,நாலக கொடஹேவா,பிள்ளையான், சாலிய விக்ரமசூரிய,தமயந்தி,நிச்சங்க சேனாதிபதி உள்ளிட்ட பலர் அவர்களுடைய வழக்குகளிலிருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பகரமாக கீர்த்தி மிக்க சுயாதீன அரச அதிகாரிகளான தில்ருக்‌ஷி டயஸ்,ஷானி அபேயசேகர துசித்த முதலிகே உள்ளிட்ட அதிகாரிகள் குற்றவாளியாக்கப்பட்டுள்ளனர்.

துசித்த முதலிகே இன்று மானசீக ரீதியாக தாக்கத்துக் குட்பட்டுள்ளார்,ஷானி அபேயசேகர இன்னும் கூலி வீட்டில் தான் இருக்கிறார்.எந்த அரசாங்கத்திலும் தலை சாய்க்காத நீதியான புலனாய்வு அதிகாரி.இன்று உள்ள ஏனைய பொலிஸ் அதிகாரிகள் போல் பணத்துக்கு தலையசைத்து வழக்குகளை திசை திருப்பி தமது செந்த சுகபோக வாழ்ககையை பலப்படுத்திய அதிகாரி அல்ல அவர்.

எனவே இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அவதானிக்கும் போது குறிப்பாக நீதித்துறை சுயாதீனம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் அச்சுப் பிழை என்ற தொழிநுட்ப காரணங்களைக் கூறி மேலும் சில இணைப்புகளை மேற்கொள்வதற்கான ஒர் முயற்சி இடம் பெறுவதாக அறியக்கிடைக்கிறது.ஊழல் மிக்க நண்பர்களை அழைத்து அவர்களுடைய வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்து அது தொடர்பான இணைப்புகளை மேலதிகமாக உள்வாங்க முயல்கின்றனர்.

அச்சுப் பிழை இருப்பின் உதாரணமாக ரோஹினி கவிரத்ன விஜயரத்ன என்பதில் ரோஹினி விஜயரத்ன கவிரத்ன போன்று அல்லது நளின் பண்டார என்பது நளினி பண்டார என்று சிறு மாற்றங்களுக்கு உள்ளாகலாம் ஆனால் 1960 ஒரே தடவையில் 2023 ஆக முடியாது என்று பல உதாரணங்களை சுட்டிக்காட்டி அறிக்கையில் இணக்கவுள்ள விடயத்தை தெரியப்படுத்தினார்.

ஆணைக்குழு அறிக்கை மூலம் எதிர்க் கட்சி அரசியல் தலைவர்களின் குரல்களை ஒடுக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இன்று எதிர்க் கட்சிகளின் குரல் பலமாக 

உள்ளது. இதற்கு ஜனநாயக ரீதியாக முகம் கொடுக்க முடியாத்தால் குறுக்கு வழிகளைத் தோடிக் கொண்டிருக்கிறது

சீனாவில் எவ்வாறு ஒரு கட்சி அரசியல் ஆட்சி வகிக்கிறதே அதே நிலையை இங்கும் குடும்ப ரீதியாக பொஹோட்டுவ கட்சியை நிலைப்படுத்த எடுக்கும் முயற்சிகளின் ஒர் அங்கம் தான் எதிர் கட்சித் தலைவர்களின் பிரஜா உரிமையை இல்லாமல் ஆக்கும் இந்த ஆணைக்குழுவாகும்.இது ராஜபக்‌ஷகளின் பகல் கனவு.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கைக்கு மீளப் பெறுவதாக உதய கம்பன்பிலநோற்று அறிவித்தார் ஆனால் ஒப்பந்தம் அவ்வாறே செயற்ப்படுத்தப்படும் என இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. மீண்டும் பொய் கூறி மக்களை ஏமாற்றும் செயல் இது.

எல்லோராலும் விரும்பப்படும் ஒர் சிறந்த கிரகட் வீரர் மற்றும் இராஜதந்திர அரசியல் வாதி தான் இம்ரான் கான் அவருடையபாராளுமன்ற உரையை கேட்க மிக ஆர்வமாக இருந்தோம்.ஆனால் இறுதி நோரத்தில் இதை இரத்துச் செய்துள்ளனர்.இன்னும் சில நாட்களில் அவருடைய விஜயத்தையையும் இரத்துச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இது தான் இவரகளின் வெளிவிவகார கொள்கை.

சீனா சார்பாக செயற்படுவதால் இன்று சர்வதேசத்திற்கு முகம் கொடுக்க முடியாத அளவில் தடமாறிக் கொண்டிருக்கிறாரகள்.

கடந்த ஒரு வருடத்தில் இந்த அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி ஜெனிவாவில் மூன்று அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளது.பழைய யுத்தகுற்றச்சாட்டுகள் அல்ல.புதிய குற்றச் சாட்டுகள்.இந்த சிக்கல்களை இந்த அரசாங்கம் தானாகவே தேடிக் கொண்டது.

இந்தியாவுடன் ஒர் முறுகல் நிலையை வளர்த்துக் கொண்டு சீனா சார்பாக நடந்த கொள்கிறது.மின் உற்பத்திக்காக சீனவிற்கு வழங்கப்பட்டுள்ள மூன்று தீவுகளையும் இலங்கை முதலீட்டாளர்களுக்கு வழங்க முடியுமல்லவா.சிறிய முதலீடு அதையும் சீனாவிற்கு வழங்கியுள்ளனர்.தேசிய செத்துகளை பாதுகாப்பதாக கூறியவரகள் இவ்வாறு சென்றால் கிட்டிய எதிர்காலங்களில் தமது செந்த மனைவிகளைக் கூட சீனாவிற்கு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

கோவிட் நிலைமைகளால் இரண்டு நேர உணவிற்குக் கூட வருமானமற்ற மக்கள் இருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசிகளை முற்படுத்தியுள்ளனர்.

அரசாங்கம் குறைந்தது உலக சுகாதார  ஸ்தாபனத்தின் முன்னுரிமை பட்டியலை கடைப்பிடிக்குமாறு  வேண்டிக் கொண்டார்.இன்று அத்தியவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வன்னமுள்ளது இதற்கு மத்தியில் பந்துல குணவர்தன வர்த்தமானிகளை வெளியிட்ட வன்னமுள்ளனர்.

வர்த்தமானிக்கேற்ற பொருட்கள் சதொச காட்சியறைகளில் கூட இல்லை என குறிப்பிட்டார்.

 69 இலட்சம் மக்கள் இன்றும் இந்த அரசாங்கத்துடன் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.மக்களை ஏமாற்று மாயைகளின் பக்கம் சென்று கொண்டிருக்கிறது.

சுற்றாடல் பிரச்சிணையை சுற்றாடல் அமைச்சின் செயலாளரே ஒப்புக் கொண்டுள்ளார்.இதற்கு பக்க பலம் வழங்கியது ஜனாதிபதியாகும்.அவர் தான் சிங்கராஜ வனத்தினூடாக செல்லும் பாதையை நிர்மானிக்க ஆரம்பித்து வைத்தார் அன்றே இந்த சூழலியளாலர்கள் எல்லா வற்றிக்கும் தடையாக இருப்பதாக கூறினார்,அபிவிருத்திக்கு சுற்றாடல் பாரிய பிர்சிணை என்று ஜொன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்.இந்த காடழிப்புகளுக்கு இவர்கள் பக்கபலம் வழங்குவதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.