Header Ads



அரசாங்கத்திற்குள் காணப்படும் பிரிவினைகள், அதன் அரசியல் நீடித்தவாழ்விற்கு உகந்தவையில்லை - பிரதமர்


பிரதமர் மகிந்த ராஜபக்ச தனக்கு ஐம்பது வருட அரசியல் அனுபவமுள்ளது என தெரிவித்துள்ளதுடன் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசநாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கியத்தை பேணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்திற்குள் காணப்படும் பிரிவினைகள் அதன் அரசியல் நீடித்தவாழ்விற்கு உகந்தவையில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் எனது ஐம்பது வருடகால அனுபவத்தின் மூலமே இந்த கருத்தினை முன்வைக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல்வீரவன்சவின் கருத்துகள் குறித்து இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கிய வேளையே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. வேலியால் போன ஓணானை எல்லாம் வேட்டிக்குள் விட்ட கதையாக இருக்கிறது. அரசியல் வெற்றிக்காக கண்டது நிண்டதையெல்லாம் கூட்டுச்சேர்த்தால் இதுதான் கதி. 50 வருட அனுபவத்தில் இதுவும் உங்களுக்குப் புரியும் அதனால் தான் ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு இனவாதம் பேசும் அரசிலை விட்டுத்தள்ளுவோம் எனக்குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் ஆட்சி கைமாறாது சரியான வலைப்பின்னலில் இராணுவம் இருக்கிறது. தம்பி அதனைப் பார்த்துக் கொள்ளுவார்.

    ReplyDelete

Powered by Blogger.