Header Ads



"கைமாறாகவேனும் முஸ்லிம் சமூகம், கிரிஸ்தவ சமூகத்துடன் இணைய வேண்டும்"


- Ramzy Razeek -

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இந் நாட்டு முஸ்லிம் சமூகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு அவமானத்தையும் அவப்பெயரையுக்கும் சந்தித்தது.

அலுவலகங்களிலும், வியார நிலையங்களிலும் பொதுச் சமூகத்திலும் உடல் உள ரீதியாக பலவேறு இன்னல்களை அனுபவித்தனர். இனவாதிகளின் தாக்குதலுக்கு எந்நேரமும் முகம் கொடுக்கலாம் என்ற அச்ச நிலையிலேயே பல மாதங்கள் கழிந்தன. முழு முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாத சமூகமாக சித்தரித்து நாட்டு மக்களிடையே "முஸ்லிம் அச்சநிலையை" மிக வலுவாக விதைப்பதற்கு இனவாதிகளும் சில அரசியல்வாதிகளும் இத் தாக்குதலை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். 

இப்போது ஈஸ்டர் தாக்குதலைத் விசாரிக்கவென அமைக்கபபட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மிக சூட்சுமமான அரசியல் பின்புலத்தோடு மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கக் கூடிய இக் கொடூர தாக்குதலால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் அநீதியாக ஏற்படுத்தப்பட்ட பெரும் கறையை துடைத்து சமூகத்தை இப் பழியிலிருந்து விடுவிக்க வேண்டியது மிகவும் கட்டாய தேவையாகும்.

இதை செய்யவேண்டுமாயின் இவ் அறிக்கை முழுமையாக நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபபட வேண்டும். அப்போது தான் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கலங்கத்தை துடைக்க முடியும். நாட்டிலே ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் நிலவும் சந்தேகத்தை கலைய முடியும். 

இன் நிலையில், இவ் அறிக்கையை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அலுத்தம் கொடுப்பதற்கு முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும். கிரிஸ்தவ, கத்தோலிக்க சமூகம் ஏற்கனவே இது தொடர்பாக எதிர்பினை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டது. ஆணைக்குழு அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு அவர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார்கள்.

கிரிஸ்தவ சமூகத்திற்கு அடுத்ததாக ஈஸ்டர் தாக்குதலால் பெருமளவில் பாதிக்கப்பட்ட சமூகம் முஸ்லிம் சமூகமே. எனவே கிரிஸ்தவ சமூகத்தோடு இணைந்து முஸ்லிம் சமூகமும் உடனடியாக விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்தும்படி உரத்து குரல்கொடுக்க வேண்டும். இதற்கான கிரிஸ்தவ சமூகத்தின் சிவில் போராடடங்களில் நாமும் கலந்து கொள்ள வேண்டும்.ஜனாஸா எறிப்பிற்கு எதிராக எவ்வாறு சமூகம் சிவில் போராட்டஙகளை முன்னெடுத்ததோ அதே போன்று இவ்விடயத்திலும் சமூகம் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

சிவில் போராட்டங்களின் முக்கியமான நோக்கம் வெகுஜன கவனயீர்ப்பை ஏற்படுத்துவது தான். இவ்வகையில் பலவந்த ஜனாஸா எரிப்புக்கு எதிரான எமது வெள்ளை கபன்துணி போராட்டம் பேசக்கூடிய அளவில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றது என்றே கூற வேண்டும். இவ் அனுபவத்தை கருத்திலெடுத்து ஜனாதிபதி விசாரணை குழு அறிக்கையை பகிரங்கப்படுத்தும்படி சமூகம் அனைத்து வகையிலும் குரலெழுப்ப தயாராக வேண்டும்.

தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்ட கிரிஸ்தவ சமூகம் தாக்குதலுக்கு பின்னரான சூழலை மிகப் பொறுமையுடனும் விவேகத்துடனும் கையாண்டது. இதற்கான கைமாறாகவேனும் இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் கிரிஸ்தவ சமூகத்துடன் இணைய வேண்டும்.

பொது விவகாரங்களில் எப்போதும் போன்று சிவனே என்று தன்பாட்டிற்கு இருந்து கொள்ளும் நிலையிலிருந்து சமூகம் இப்போதாவது வெளிவர வேண்டும். குறித்த அறிக்கையின் தீர்மானங்களை அறிந்து கொள்வது எமதும் முழு நாட்டு மக்களினதும் அடிப்படை உரிமையாகும். பாதிக்கப்பட்ட கிரிஸ்தவ சமூகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அதே போல் அநியாயமாக முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்படுத்தபபட்ட பெரும கறை கலையப்பட வேண்டும். எனவே இனியும் காலம் தாழ்த்தாது திட்டமிட்ட அடிப்படையில் ஒரு வெகுஜன எதிர்ப்பியக்கத்தை முஸ்லிம் சமூகம் முன்நின்று ஆரம்பிக்க வேண்டும். குறித்த விசாரணை அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் வரை எமது இந்த சிவில் போராட்டம் கிரிஸ்தவ மக்களையும் இணைத்ததாக தொடர்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

3 comments:

  1. Christian society know that this sad incidence was done to gain the lost political power. Every one has the right to see the report.

    ReplyDelete
  2. இந்த கட்டுரை எழுதின நபர் இவர் குறிப்பிடும் போராட்டத்தை முன்னின்று நடாத்த முன்வருவாரா? இந்த சமூகத்தில் குறை சொல்லவும் செய்யச்சொல்லவும் அதிகமானவர்கள் உண்டு. ஆனால் செயற்படுத்த தான் முன்வருவதில்லை. குறித்த கட்டுரையாளர் ஒரு போராட்டத்தை ஆரம்பித்து ஒரு முன்மாதிரியாளராவாரா ?

    ReplyDelete
  3. This article tells a very important matter to think allMuslims. Jazakumullah.

    ReplyDelete

Powered by Blogger.