February 14, 2021

நாங்கள் சோரம் போகவில்லை, வாக்குறுதியினை நிறைவேற்றாது அரசாங்கம் ஏமாற்றுகிறது - ஹரீஸ்


மக்களின் உணர்வுகளை அறிந்தே எங்களை நாங்கள் பணயம் வைத்து 20 க்கு ஆதரவாக வாக்களித்தோம். பாராளுமன்றதிற்கு உள்ளும், வெளியிலும் கடுமையான முறையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதேநேரம் இவ் அரசின் சலுகை, பதவி, பட்டங்களுக்கு எப்போதும் சோரம் போகவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் நாங்கள் அரசின் அங்கத்தவர்களாக ஒருபோதும் மாறவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமன எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். 

மு.கா தலைமையகமான தாருஷலாமில் நேற்று இரவு நடைபெற்ற உயர்பீட கூட்டத்தை தொடர்ந்து  ஊடகவியலாளர்களுக்கு    பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசின் முக்கிய தலைவர்கள் 20 ம் திருத்த சட்டமூல வாக்கெடுப்புக்கு முன்னர் எங்களை அணுகி எங்களிடன் ஆதரவு கேட்டபோது ஜனாஸா நல்லடக்க விடயம் முதல் நாட்டில் உள்ள முஸ்லிங்களின் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளையும் அரசின் முக்கியஸ்தர்களுடன் நன்றாக விளக்கி அவர்களிடமிருந்து உறுதியான வாக்குறுதியை பெற்ற பின்னரே 20 க்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்தோம். ஜனாஸா விவகாரம், தனியார் சட்டங்கள், பிராந்திய ரீதியான பிரச்சினைகள் அடங்கலாக பல பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய நிபந்தனைகளை முன்வைத்தே அரசுக்கு ஆதரவளித்தோம். அவர்களும் எங்களுக்கு நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதியளித்தனர். இவற்றை ஊடக வெளிச்சத்தின் முன்னிலையில் கொண்டுவந்தால் கடும்போக்குவாத சக்திகள் குழப்பிவிடுவார்கள் என்பதனாலையே நாங்கள் மௌனமாக இருந்தோம். 

நாங்கள் 20 ம் திருத்தத்தை ஆதரித்து இரு வாரங்களின் பின்னர் ஜனாதிபதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை எமது ஜனாஸாக்களை உலர் பிரதேசமான மன்னாரில் அடக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த விடயம் ஊடகங்களின் வாயிலாக வெளிவந்தவுடன் பௌத்த பிக்குகளும், சில இனவாதிகளும் அரசை எதிர்த்து முரண்பட்டதால் அவ்விடயம் நிறுத்தப்பட்டது. அதன் பின்பும் முஸ்லிம் எம்.பிக்காளான நாங்கள் சளைக்காமல் இரண்டு மாதங்களாக முயற்சித்து பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் வைத்தியர் ஜெனிபர் பெரேராவின் தலைமையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அந்த குழு நியமிக்கப்பட்டு இரு வாரங்களின் பின்னர் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பரிந்துரையையே சிபாரிசு செய்தது. இந்த குழுவின் அறிக்கையையும் அமுல்படுத்த விடாமல் சில சக்திகள் தடுத்தது எங்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றமாக இருந்தது. 

எங்களின் முயற்சியை கைவிடாது தொடர்ந்தும் பிரதமரை சந்தித்து இன்னும் காலத்தை இழுத்தடிக்காது உடனடியாக ஜனாஸா விடயத்தில் தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டோம். அதைத்தொடந்து வந்த கடந்த வார பாராளுமன்ற அமர்விலும் கூட பகிரங்கமாக பிரதமர் சபையில் வைத்தே அனுமதிக்க ப்படும் என்று அறிவித்தார். அப்போது சபையில் இருந்த நான் அவருக்கு நன்றி தெரிவித்த போது அதை அவர் அமோதித்தார். இருந்தும் சில மொட்டு சார்ந்த எம்.பிக்கள் ஜனாஸா அடக்க அனுமதிக்கபடமாட்டது  என்று மக்களை குழப்பி வருகின்றனர். இதுவும் எங்களுக்கு பலத்த ஏமாற்றம் அளிக்கிறது.

அரசாங்கம் தந்த வாக்குறுதியினை நிறைவேற்றாமல் தொடர்ந்தும் ஏமாற்றுகிறது என்பதை இங்கு வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

இன்னும் காலமேடுத்து எங்களை ஏமாற்றாமல் ஜனாஸா அடக்க உடனடியாக  அனுமதிக்குமாறு அரசை கேட்டுக்கொள்வதுடன். மக்களின் உணர்வுகளை அறிந்தே எங்களை நாங்கள் பணயம் வைத்து 20 க்கு ஆதரவாக வாக்களித்தோம். இருந்தும் இவ் விடயம் நிறைவேறா சூழ் நிலையில் இவ்விடயத்துக்காக பாராளுமன்றதிற்கு உள்ளும், வெளியிலும் கடுமையான முறையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதேநேரம் இவ் அரசின் சலுகை, பதவி, பட்டங்களுக்கு எப்போதும் சோரம் போகவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் நாங்கள் அரசின் அங்கத்தவர்களாக ஒருபோதும் மாறவில்லை என்பதுடன் எதிரணியில் இருந்து கொண்டு தொடர்ந்தும் சமூக அடக்கு முறைக்கு எதிராக போராடுவோம் என்றார்.

13 கருத்துரைகள்:

நீங்க சோரம் போகவில்லை தம்பி ஓரம் போய்டீங்க.

உண்மைக்கும் பொய்க்கும் அல்லாஹ்வின் தீர்ப்பு உண்டு.
அல்லாஹ்வின் தண்டனை மிகவும் பயங்கரமானது.

Yes this is the way they did big peaceful solution but unfortunity racists are so highly effecting.

அரசின் அங்கமாக மாறி மேற்குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றலாம் தவறில்லை.

Mr. Harris MP

In short, 4 of you MPs from SLMC voted for 20A because some key personalities in the Govt. Promised you, among other community problems, that they will permit the Burial of the Janaza of Muslim Covid 19 victims.

Obviously you all informed the SLMC leader Rauf Hakeem about these promises. Then, did he agree with you in voting for 20A? If so, can you explain why your leader voted against the 20A having allowed you to vote in favour? Can you please explain that to the people?

What a Nonsense. You cannot be equal to the dust of Sanakkian's feet.

இப்படி அவர்கள் குழப்புவார்கள் என்று சும்மா இருந்துவிட்டு இப்ப கதை அளக்க வேண்டாம் ஹரீஸ் அவர்களே. உங்களூக்கு அறையில்தான் ஆடமுடியும் அம்பலத்தில் ஆடமுடியாது. இத்தனை வருடங்கள் M.P ஆக இருந்து எதை சாதித்திருக்கிறீர்கள்?.ஒழுங்கான bus stand உங்கள் ஊரிலில்லை.தரமான D.S office கட்டடமில்லை,பாதைகளும் உங்கள் அடிவரூடிகளுக்கு :கண்ரக்ட்"கொடுத்து ஒழுங்காயில்லை.ஏன் இன்னும் இந்தப் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீங்க.ஒதுங்கி விட்டு சேவை செய்யும் வேலை செய்யும் இளம் தலைமுறைக்கு வழிவிடுங்கள்.நீங்கள் 20 வருட பதவியில் என்ன அபிவிருத்தியை செய்து கழித்தீர்கள்? நாளை மறுமையில் நீங்கள் தப்ப முடியாது.நியாஸ்

better resigns your post from mp,
give a way for community to progress
,
pawned community for you business, property,

this real , dont tell any reason
during rajapaksa period around2014-2015)also after althugama roits, you stayed at temple tree to get million money from rajapksa thugs regierment
this forgiveness is resigns your post only 4 culprits slmc

enough look at sky , please resigns you ,and other culprits person

CASTED VOTE PEOPLE FOR YOU ARE FOOLISH , I THINK, BETTER RESIGNS POST

You Betrayed not only Muslimss and also this nation ..adai no one trust u anymore. U are jackals

Soram porathum...vaaakkuruthiya emaatturathum...any difference?

It is very difficult to identify a munafiq. Allah will reveal their identity soon.

Post a comment