Header Ads



கொழும்பு குப்பைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி


கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்காக முத்துராஜவெல பகுதியில் 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

இதனூடாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு நாளில் சேகரிக்கப்படும் 700 தொன் குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதுடன், மின் சக்தியும் சேகரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

நாளொன்றில் 700 தொன் குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

2 comments:

  1. Late but What a great work...

    ReplyDelete
  2. Is it the same garbage Champikka wanted to dump in Puttalam?

    ReplyDelete

Powered by Blogger.