Header Ads



பாதுகாப்பு இன்றி வராதீர், மேர்வினுக்கு பகிரங்க எச்சரிக்கை


- விஜயரத்தினம் சரவணன் -

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களைப் பற்றியோ, இளைஞர்களைப்பற்றியோ மேர்வின் சிலவா பூரணமாக புரிந்துகொள்ளவில்லையென, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். 

இதேவேளை, வடக்கு, கிழக்குக்கு வரும் போது, அவர் பாதுகாப்பின்றி வருவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும், அவர் கூறினார். பொலிஸ் சீருடையில் தான் இருந்திருந்தால், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்களின் கால்களை முறித்திருப்பேன் என, மேர்வின் சில்வா, அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் போராட்டமானது, ஜனநாயக ரீதியான போராட்டமாகுமென்றார். ஆனால், இந்தப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில், மேர்வின் சிலவா கருத்துகளைத் தெரிவித்துள்ளாரென குற்றஞ்சாட்டிய ரவிகரன், இவருடைய இவ்வாறான கருத்து கோமாளித்தனமாகவே இருக்கின்றதெனவும் கூறினார். "அத்துடன், பொலிஸ் சீருடையை தான் அணிந்திருந்தால், இந்தப் போராட்டத்தில் பங்குபற்றியவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என்கின்றார். அவ்வாறு உடைக்கக்கூடிய நிலையில் தமிழர்களின் கால்கள் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். "இந்த நாட்டில் பொலிஸ் சீருடையில் இருந்தால், இவர் கூறுவதைப் போன்று மக்களின் கால்களை உடைக்கமுடியுமா?" எனவும், ரவிகரன் வினவினார். 

இவரது இத்தகைய கருத்து, பொலிஸாரின் செயற்பாடுகளையும் அவர்களின் கடமைகளையும் கேலிசெய்வதாக அமைந்தாகத் தெரிவித்த அவர், நிச்சயமாக இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.


1 comment:

Powered by Blogger.